உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை பிறிதல்ல வென்று பெருநூல், வேதங் கிடந்து தடுமாறு வஞ்ச வெளியென்ப கூடன் மறுகிற், பாதங்க ணோவ வளையிந்த னாதி பகர்வாரை யாயு மவரே.

என்றும் கூறுவவாயின.

131

இனி, இப்பெற்றித்தான அறிவுக்குப் புலப்படாமையால் இறைவன் உண்டென்று மாத்திரங் கூறுதலாற் போந்தபயன் என்னையெனின், அறிவு நிலைக்கு அவன் புலப்படானாயினும் அதற்கு மேற்பட்ட உணர்வுநிலையில் அடையப்படு பொருளாய் விளங்கித்தோன்றுமாகலின் அது கடாவன்றெனமறுக்க. அற்றேல், உணர்வு நிலை நம்மனோர்பா லுண்டென்பது எற்றாற் பெறுது மெனின்; காதற்கிழமையிற் சிறந்தாரிருவர் அவ்வுரிமையினைத் தாங் கருதும் போதெல்லாம் அவரகத்தேஒரின்பந் தோன்றுதல் அனுபவ மாத்திரையாய் விளங்கக் கிடந்ததொன்றாம், அவ்வின்பம் அது தோன்றப் பெற்றார் தமக்கே புலனாயினல்லது அஃதிவ்வாறிருந்ததெனப் பிறர்க்கு அறிவிக்கவும் உரைக்கவும் படாத இயல்பிற்றாம். காணவுங் கருதவு முரைக்கவும் படாத முதல்வனோ டொற்றித்து நின்று அவனை யனுபவித்தல், அவன்போற் காணவுங் கருதவும் உரைக்கவும் படாத உணர்வு நிலை யொன்றற்குமாத்திரமே வாய்ப்பதாம். என்னை? அகத்தே தோன்றும் அன்பும் அவ்வன்பே தனக்குண்மையுருவாய்க் கொண்ட முதற்பொருளும் வேறல்லாமையால், அவ்வன்பு வரம்பின்றி இளகி விரிந்த உணர்வு நிலையில் அஃதின்பப் பாருளாய் ளாய் முறுகித்தோன்றல் இன்றியமையாததாகலின்; இவ்வுண்மை யுணர்ந்தே திருமூலரும்,

“அன்புஞ் சிவமு மிரண்டென்ப ரறிவிலார் அன்பே சிவமாவ தியாரு மறிகிலார் அன்பே சிவமாவ தியாரு மறிந்தபின் அன்பே சிவமா யமர்ந்திருந் தாரே.”

என்று திருவாய் மலர்ந்தருளினார்.

ஆகவே, முழுமுதற்கடவு ளுண்டென்பதனை விளங்க அறிவித்தற்குரிய அறிவு நிலையும், பின் அதனோடு வேறறக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/164&oldid=1579186" இலிருந்து மீள்விக்கப்பட்டது