உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

L

133

பெரியதோர் மலைமுழைஞ்சினுட் பொன்னும் மணியுஞ் சிதறிக் கிடத்தல் ஒரு வியப்பன்று; ஒரு சிறு கற்பிளவிலே அரிய பெரிய முழு மணிகள் அடுக்கடுக்காய்க் கிடந்து எடுக்குந் தோறும் குறைபடாதிருத்தலே பெரிதும் வியக்கற் பாலதாகும். சிறிய வான்மீன்கள் அகன்ற அவ்வானத்திற் காணப்படுதல் ஒரு வியப்பன்று; அவ் வகன்ற வானும் வேறு மாடமாளிகை கூட கோபுரங்களும் ஒரு சிறிய கண்ணாடியினுட் காணப்படுதலே மிகவும் வியக்கற்பாலதாம். இது போலப் பெரிய ஒர் உரையிலே சிலபொருளேனும் பல பொருளேனுங் காணப்படுதல் வியப்பினை விளைவியாது. மற்றுச் சிறியதொரு பாட்டிலே பல திறப்பட்ட ஆழ்ந்த பொருளெல்லாம் காணப்படுதலே வியக்கற் பாலதாகும். உரையில் ஒரு வரையறையின்மையினாலே பொருட்கு வேண்டுவனவும் வேண்டாதனவுமான பல சொற்கள் நிரம்பி நின்று வியப்பினைத் தாராவாய்த் தாமெடுத்த பொருளை மாத்திரம் எம்மறிவுக்குப் புலங்கொள விளக்கி யொழிகின்றன. மற்றுச் செய்யுளிலோ பொருட்சாரமான சொற்கள் மாத்திரம் ஆய்ந்தமைக்கப் படுகின்றனவாகலின், அச் சொற்கள் கொண்ட பொருட்கருவை அறியப் புகுவானொருவன், தன் அறிவால் அதனைக் கூர்த்தறிய வேண்டுதலின் தன்னறிவு மிக நுணுகப் பெறுதலோடு அச் சிறிய சொல்லிற் பெரிய பொருளடங்கி நிற்றலை அறிந்த மாத்திரையினாலே தன்னை யறியாெ வியப்புமுடனெய்தி, அதன்கண் ஓர் இன்பந்தோன்ற அதன் வயப்பட்டுச் சிறக்கின்றான். ஆகவே, பாட்டு ஒன்றுமே உயிர்கட்கு அறிவை விளக்கி அதற்கும் மேற்பட்ட உணர்வை எழச்செய்து இன்பம் பயப்பதொன்றாய் நிலைபெறுகின்றது. உரைப் பயிற்சியில் அறிவு மாத்திரம் விளக்க மெய்துமேயல்லது உணர்வின் வழித்தான இன்பந்தோன்றுதல் இல்லையென்க.

அல்லதூஉம்,

தொரு

உரையெல்லாம் இயற்கையிலேயே சைதழுவாது நடப்பனவாமாகலின் அவை உணர்வை எழுப்புமாறு எவ்வாற்றானு மில்லையென்க. பாட்டுகளோ இயற்கையாகவே இடங்கட்கு ஏற்ற பெற்றி யெல்லாம் பல திறப்பட்ட இசைதழுவி நடக்குமாகலின் அவை உயிருணர்வை எழுப்புதற்கட் பின்னுஞ்சிறப்புடையவாம். என்னை? இசையைக் கேட்டு உருகாத பொருள் உலகத்தில்லையன்றே? உலகியல் சிறிதுமறியாத மகவை அன்னை தொட்டிலிற் கிடத்தித் தாலாட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/166&oldid=1579203" இலிருந்து மீள்விக்கப்பட்டது