உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

135

அவ்வியல்பை ஒருதாரண முகத்தான் விளக்கவே அஃதினிது விளங்குமாகலின் மாணிக்கவாசகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய திருச்சிற்றம்பலக் கோவையா ரென்னுங் ஈண்டெடுத்துக்

களஞ்சியத்துள்ள காட்டுவாம்;

66

ஒரு முழுமணியை

‘ஆவா இருவர் அறியா அடிதில்லை யம்பலத்துள்

மூவா யிரவர் வணங்கநின் றோனையுன் னாரின் முன்னித் தீவா யுழுவை கிழித்ததந் தோசிறி தேபிழைப்பித்

தாவா மணிவேல் பணிகொண்ட வாறின்றொ ராண்டகையே.’

என்பது, தன்னுடைய தலைமகள் எவ்வாற்றானுஞ் சிறந்த ஓராண்மகனோடுங் காதல் கொண்டு நேயமானமை சில குறிப்பாலறிந்த தோழி, பின்னும் அவரிருவர் மாட்டும் நிகழ்ந்த அந் நேய வுரிமையினைத் தெளிந்து கொள்ளும் பொருட்டுத் தன்றலைமகளை நோக்கி அவள் நடுங்குதற் கேதுவாவன சில சொல்லி அதனான் அவ்வுண்மை துணிகின்ற நடுங்கநாட்டம் என்னுந் துறைபற்றிவந்தது இத் திருப்பாட்டு.

ம்

இதன்கண் முன்னிரண்டடிகளும் கன்னெஞ்சினையும் இளக்கும் அன்பின் சுவை நிரம்பி முழுமுதற் பொருளான சிவத்தின் பெருமை தெரிவியா நின்றன; பின்னிரண்டடிகளும் தோழி தன்தலைமகளை நோக்கி நடுங்கக் கூறியதைக் காட்டு கின்றன. தலைமகள் ‘எட்டியுஞ் சுட்டியுங் காட்டப்படாத' வடுவில்லாச் சிறந்த குலத்திற் பிறந்து நல்லொழுக்கமே அணிகலனாய்க் கொண்டு போதருகின்றாளாகலின் அவளை நோக்கி ‘நீ சிறந்த அவ்வாண்மகனோடு காதல் கொண்டமை யான் அறிவேன்' என்று கூறுதற்கு மிக அஞ்சியும், அவ்வாறு கூறல் தன் நிலைக்குக் தகாதென நினைந்தும், தலைமகடன் வாயானே அதனை யுரைப்பக் கேட்டலே முறையாமென உறுதிசெய்தும் ச் செய்யுளில் மிகவுந் திறம்பட அதனை ஆராய்ந்தமை பெரிதும் வியக்கற் பாலதாம்.

ம்

அப்பின்னிரண்டடியின் பொருள் வருமாறு; 'கண்மணி யனையாய்! இன்று யான் இன்று யான் இம் மலைச்சாரலின் வழியே வருவேனாயினேன்; அங்ஙனம் வருவேனுக்குச் சிறிது சேய்மைக் கண்ணே சினத்தாற் றீயையுமிழும் ஒரு பருத்த வேங்கைப் புலி அந்தோ கிழித்தது! ஆ! அதனை ஒரு நொடிப்பொழுதிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/168&oldid=1579219" இலிருந்து மீள்விக்கப்பட்டது