உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

-

மறைமலையம் - 9

தப்பிப்போய் எவ்வாற்றானுஞ் சிறந்தவனான ஓர் ஆண்டகை தன் வேற்படையைச் சுழற்றிய திறத்தை என்னென்று கூறுவேன்!’ என்று தோழி தலைமகளை நோக்கிக் கூறியதாம். இங்ஙனங் கூறியதனைக் கேட்டலுந் தலைமகள் முதலிற் பொறுத்தற்கரிய நடுக்கமெய்திப் பின் சிறிதே அது தணிந்து எண்ணுவாள்: 'என்னை! இம் மலைச்சாரலில் எளியேன் பொருட்டு வந்து இயங்குவான் என் ஆருயிர்க் காதல் னொருவனன்றே! அவனை யன்றி ஆடவர் பிறர் ங்கு வரப்பெறாரன்றே! அவன் ஒரு பெரிய வேங்கைப் புலியால் இழுக்க மெய்தினனோ! என்றிங்ஙனமெல்லாம் ஆராய்ந்து வருந்து நிலைமையில் ஈண்டுத் தோழி தன் சொற்களை அவள் ஐயுறுமாறு கூறிய விரகு நனி வியக்கப்படுந்தன்மைத்து.

தன்றலைவி கற்பிற்கு அரசியாகலானும் மிக நுண்ணிய உணர்வுடையளாகலானும் தன் காதற் கொழுநன் புலிக்கோட் பட்டான் என்பது கேட்டனளாயின் அது கேட்ட அந்நொடியே உயிர் துறப்பாள் என மிக அஞ்சித்தான் கூறுஞ் சொற்களில் துணிவு பிறவாது ஐயமே நிகழுமாறு கூறினாள். 'தீவாய் உழுவை கிழித்தது' என்னுஞ் சொற்றொடர் ‘தீவாயையுடைய புலி மற்றை யொருவிலங்கை நகத்தாற் கிழித்தது' எனவும், ‘அவ்வாண்மகனை அல்லது ஒலிவிலங்கைக் கௌவுதற் பொருட்டு அப் புலி தன் தீவாயை அகலத் திறந்தது' எனவும், 'வேங்கை, தன் வாயாற் கிழித்ததென்றே சொல்லற்கியைந்த அந் நேரத்தே' எனவும் பலபொருடந்து ‘அங்ஙனம் அவ் வேங்கை நிற்கும் அப்பொழுதே அவ் விலங்கை அது கிழிப்பதனினின்றும் தவறச்செய்து, அல்லது அது தன்வாயை அகலத் திறந்ததற்குத் தப்பி, அல்லது தன்னைப் பற்றுதற்கு அது வந்ததாக அதனைத் தப்பி அவ்வாண்மகன் தன் வேற்படையை விடுத்து அதனைக் கொன்றவாறு பெரியதொரு வியப்பாயிருந்தது' என்னும் பின்றொடரோடு இயைகின்றதாகலின், ச் சொற்றொடரைக் கேட்ட தலைமகள், தன் காதலன் இறந்து பட்டான் என்னும் பொருட்டுணிவு அதனாற் அதனாற் பெறப் படாமையின் தானும் இறந்துபடாளாய்க் கலக்க மாத்திரம் மிகக்கொண்டு அச் சொற்றொடர்ப் பொருடெளியும் நிலையிலிருந்தாள். இங்ஙனம் கலக்கங் கொண்ட அந் நிலையில் தான் அவ்வாண்டகைமேற் கொண்ட காதலை மறைக்கும் நினைவை மறந்து அக் காதலைத் தன்றோழிக்கு முற்றும் புலப்படுத்தினா ளாகலின், அச் அச் சொற்பொருடெளிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/169&oldid=1579228" இலிருந்து மீள்விக்கப்பட்டது