உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

137

பின்னேரத்தே தன் காதல் தோழிக்குப் புலனாயினமை கண்டு பின் அதனை அவட்கு மறையாளாய் உரைப்பாளாவது.

6

இவ்வாறு தன்றலைவியின் நிலை அவடானே புலப்படுத்தற் கென்று தோழிசெய்த சூழ்ச்சியாக மாணிக்கவாசகப் பெருமான் வைத்துக் கூறிய வியத்தகும் ஆற்றலை நினையுங்கால் மக்கள் உள்ளத்தின் இயல்புமுற்றும் அவரறிந்தாரென்பது இனிது விளங்கவில்லையா? இற்றை ஞான்று ஆங்கில நன்மக்கள் செய்துபோதரும் உளநூல் ஆராய்ச்சிகளெல்லாம்' இற்றைக்கு ஆயிரத்தெழுநூறு ஆண்டுகட்கு முற்பட்ட நம்பெருமான் திருப்பாட்டிலமைந்து கிடத்தல் பற்றி நம்முள்ளம் இறுமாப் பெய்துகின்றது. “ஆவா விருவரறியா" என்னுமிச் செய்யுள் சில்சொல்லிற் பல்பொருடேற்றி அறிவை நுணுகச் செய்து அவ்வாற்றால் உணர்வெழுச்சி பெறச்செய்தல் நன்கு தெளியக் கிடந்தது. இதனோடு இச்செய்யுள் இன்னோசை நலந்தழுவி வாய்ப்புறச் சென்று கேட்டாரை யெல்லாம் இன்புறுத்துமாறும் குறிக்கொளற்பாற்று. இவ்வாறே திருச்சிற்றம்பலக் கோவையாரிலுள்ள ஒவ்வொரு செய்யுட்களும் சொல்வளம் பொருள்வளந் துறுமி மிளிர்கின்றன; இவ் வருமைத் திருக்கோவையாரை யொக்கும் நூல்கள் தொல்காப்பியம் திருக்குறள் என்னுமிரண்டுமே யன்றிப் பிற எந்நூலும் எக்காப்பியமும் இதற்கொப்பாகா. இம் மூன்று நூல்களும் ஒப்புயர்வில்லா உவரா அமிழ்தங்களாம். இத் திருக்கோவையாரின் சிறப்புணர்ந்தே ஆன்றோர்,

66

“ஆரணங் காணென்ப ரந்தணர் யோகிய ராகமத்தின் காரணங் காணென்பர் காமுகர் காமநன் னூலிதென்பர் ஏரணங் காணென்ப ரெண்ண ரெழுத்தென்ப ரின்புலவோர் சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே.”

என்று அருளிச் செய்தார்.

என்றிங் கெடுத்து விளக்கியவாற்றாற் செய்யுளென்பது சொற்சுருக்க பொருட்பெருக்கமுற்று இசைதழீஇ நடந்து உயிர்களறிவை விளக்கிப் பின்னதன் மேற்பட்ட உணர்வை எழச்செயும் பான்மையுடைத்தாதல் இனிது பெறப்பட்டது.

6

இனி, இப்பட்டினப்பாலை என்னும் அரிய பெரிய பாட்டை அருளிச் செய்த உருத்திரங்கண்ணனார் ‘வசையில் புகழ் வயங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/170&oldid=1579236" இலிருந்து மீள்விக்கப்பட்டது