உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை 55. மாவுதி நறும்புகை முனைஇக் குயிறம்

மாயிரும் பெடையோ டிரியல் போகிப் பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த் தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கு முதுமரத்த முரண்களரி

60. வரிமண லகன்றிட்டை மிருங்கிளை யினனொக்கற் 3கருந்தொழிற் கலிமாக்கள் கடலிறவின் சூடுதின்றும் வயலாமைப் புழுக்குண்டும்

65. 4வறளடம்பின் மலர்மலைந்தும் புனலாம்பற் பூச்சூடியு

நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு நாண்மீன் விராய கோண்மீன் போல மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக்

70. கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டிப் பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ

5

திருஞ்செருவி னிகன் மொய்ம்பினோர் கல்லெறியுங் கவண்வெரீஇப்

புள்ளிரியும் புகர்ப்போந்தைப்

75. பறழ்ப்பன்றிப் பல்கோழி

யுறைக்கிணற்றுப் புறச்சேரி

மேழகத் தகரொடு சிவல்விளை யாடக் கிடுகுநிரைத் தெஃகூன்றி

நடுகல்லி னரண்போல

80. நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய

குறுங்கூரைக் குடிநாப்ப

ணிலவடைந்த விருள்போல

வலையுணங்கு மணன்முன்றில் வீழ்த்தாழைத் தாட்டாழ்ந்த

145

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/178&oldid=1579303" இலிருந்து மீள்விக்கப்பட்டது