உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

3. பொருட்பாகுபாடு

கு

(1-8) காவிரியாற்றின் சிறப்பு

கமலையினிடத்தே தோன்றி என்றும் நீர் அறாது ஒழுகும் இயல்பினதாய்ச் சோழநாட்டை வளம்படுத்து வருகின்ற காவிரியாற்றின் சிறப்பு முதற்கட் சொல்லப்படுகின்றது. மழை வறக்குங் காலத்தில் சுக்கிரன் எனப்படும் வான்மீன் கீழ்த்திசை யினின்று மேற்றிசையிற் செல்லாமல் தென்றிசைப் பக்கமாய்ச் செல்லுமென்பதும், மழைத்துளியைப் பருகி உயிர்வாழ்கின்ற வானம்பாடிப்புள் அது பெறாமையின் அப்போது மிக வாடுமென்பதும், இத்தன்மையாக மழைபெய்யாது மாறிப்போன அவ் வற்கட காலத்திலும் காவிரியாறு நீர்வற்றாது ஒழுகிப்போய் வயல் நிலங்களை நிறைத்து அங்கே பொற்றுகளையும் திரட்டித் தொகுக்கு மென்பதும் சொல்லப்படுகின்றன.

(9-19) சோழநாட்டு மருதநிலவளம்

வயல்கள் என்றும் மாறாமல் விளைந்து கொண்டிருக் கின்றன.அங்கே கருப்பஞ்சாற்றைக் காய்ச்சுகின்ற கொட்டில்கள் பல இருக்கின்றன. அவற்றில் அதனைக் காய்ச்சும்போது உண்டாகும் தீப்புகைபட்டுப் பக்கத்தே வயல்களில் மலர்ந்த நெய்தற்பூக்கள் அழகுகெட்டு வாடுகின்றன. காய்த்த செந்நெற்கதிரை நிரம்ப உண்டு வயிறு பருத்த முற்றின எருமைக்கன்றுகள் ஆங்காங்குள்ள நெற்கூடுகளின் நீழலிலே உறங்கிக் கொண்டிருக்கின்றன. குலை நெருங்கின தென்னை குலைவாழை பாக்குக்காயை யுடைய கமுகு மா பனை முதலிய மரங்களும் மஞ்சள் சேம்பு இஞ்சி முதலிய செடிகளும் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன; என்பது சொல்லப் பட்டது. இது காறுங் காவிரிபாயுஞ் சோழ நாட்டின் வளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/187&oldid=1579384" இலிருந்து மீள்விக்கப்பட்டது