உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

155

பொதுவகையாற் கூறி இனிப் பாக்கம் கழி முதலியவற்றின் சிறப்பை விரித்துக் கூறப்புகுகின்றார்.

(20-27) பாக்கம்

பாக்கங்களிலே அகன்ற வீடுகள் கட்டப் பட்டிருக் கின்றன. அவ் வீட்டு முற்றங்களிலே உலரவைத்திருக்கும் நெல்லுக்குக் காவலாய் இருக்குஞ் சிறு பெண்கள் ஒளி விளங்கு நெற்றியும் கள்ளம் அறியாத பார்வையும் திருந்திய அணிகலன் களும் உடையர்; இவர்கள் அந் நெல்லைத் தின்னவருங் கோழிகளை வெருட்டும் பொருட்டு எறிந்த கறவுக் குழைகள் அம் முற்றத்திற் சிதறிக்கிடந்து, அங்கே சிறு பையன்கள் மூன்று உருள் உடைய சிறிய தேரைக் குதிரையின்றி இழுத்துக் கொண்டு வருகையில், அதன் உருள்களை இடறி அச்சிறுதேர் போகாமல் வழிமுன்பை விலக்குகின்றன.2 தாம் மனங்கலங்குதற்குக் பகை தமக்குச் சிறிதுமில்லாமையால் மனக்கொழுமையினையுடைய பல குடிகள்

காரணமான

பெற்றிருக்கின்றன அப்பாக்கங்களெல்லாம்.

(28-39) படப்பை முதலியன

நிறையப்

இனி ஒன்றற்கொன்று அருகிலுள்ள பல ஊர்களையுடைய நீண்ட சோழனாட்டில் எங்குஞ்சென்று வெள்ளிய உப்பை விலைசெய்து நெல்லை ஏற்றிக் கொண்டுவந்த வலிய படகுகள் பந்தியிலே நிற்குங் குதிரைகளைப்போலத் தறிக டோறுங் கட்டப்பெற்றிருக்கும் உப்பங்கழிகள் சூழ்ந்த நெய்தல் நிலத்துத் தோட்டங்களும், மனவெழுச்சி தருதற் கேதுவான புதுவருவாயினை யுடைய தோப்புகளும், அத்தோப்புகளுக்குப் புறம்பேயுள்ள பூஞ்சோலைகளும், முகிற்கறை சிறிதுமில்லாது தெளிந்த வானத்தில் திங்களைச் சூழ்ந்து மகம் என்னும் வான்மீன் விளங்கினாற் போன்ற கரையினை அல்லது கோயிலையுடைத்தாய் மணங்கமழும் பல வண்ணப் பூக்கள் நிரம்பியிருத்தலாற் பலநிறமுடைத்தாய்த் தோன்றும் பொய்கைகளும், இம்மையிலும் மறுமையிலும் காமவின்ப நுகர்ச்சியினைப் பயக்கும் இணைந்த ஏரிகளும், அக் காவிரிப்பூம் பட்டினம் எங்கும் இருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/188&oldid=1579394" இலிருந்து மீள்விக்கப்பட்டது