உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

6

மறைமலையம் – 9

(40-50) சோறிடும் அட்டிற் சாலைகள்

கதவுகளெல்லாம் புலியுருக்கள் செதுக்கப்பட்டனவாய்த் தம்வாய் பொருந்தப் பெற்றிருப்பத், திருமகளை எழுதிய திண்ணிய மதில்கள் அமைந்து இம்மையிற் புகழ் பரம்புதற்குக் காரணமான நற்சொல் வளரவும் மறுமையினைத் தருதற்குரிய அறவொழுக்கம் நிலைபெறவுஞ் சிறந்த அடுக்களைகளில் மிகுதியாகச் சமைத்த சோற்றை வடித்தலால் ஒழுகுங் கொழுங் கஞ்சியானது யாற்றில் வெள்ளம் வந்தாற்போல எங்கும் பரவி ஓடுவதாயிற்று; அக் கஞ்சியைக் கண்டு பருகுதற்குச் சென்ற எருத்துமாடுகள் ஒன்றோடொன்று சண்டையிடுதலால் அது மண்ணொடு கலந்து சேறாய்ப் பின் தேர்கள் ஒடுதலாற் புழுதியாய் மேலெழுந்து பல வேறுவகையான சித்திரங்கள் தீட்டப்பட்டிருந்த வெள்ளிய அரண்மனையின்மேற் படிந்து வெண்ணீற்றிற் புரண்ட களிற்றியானைபோல் அழுக்கேறப் பண்ணுவதாயிற்று.

(51-53) பௌத்த, சமணப் பள்ளிகள்

ன்னும், குளிர்ந்த கிணறுகள் பொருந்தப் பெற்றன வாய்ப் பெரிய எருத்து மாடுகள் நிற்கும் பலசாலைகளும், தவ ஒழுக்கம் நடைபெறும் அமணர் பௌத்தருடைய பள்ளிகளும்

ஆங்காங்குள்ளன.

(53-58) காளிகோட்டம்

தாம் தங்கும் இளமரக்காவிலே விளங்கிய சடை முடியுடையரான முனிவர் நெருப்பிலிட்டு வேட்கும் நெய்ப் புகையைக் கண்டு புயலென அஞ்சிய குயிற்சேவல்கள் அச் சோலையிலிருத்தலை வெறுத்துத் தம்பெடைகளோடும் அவ் விடத்தை விட்டுப்போய்ப் பூதங்கள் காவலாயிருத்தலாற் புகுதற்கு அரிய காளிகோட்டத்திற் சென்று தூதுணம் புறாக்களோடும் ஓர் ஒதுக்கிடத்தே தங்கியிருக்கும்.

ம்

(59-74) செம்படவர் குப்பம்

நெடுநாட்பட்ட மரங்களை யுடையவாய்ச் சண்டை யிடுதற்குச் சமைத்த இடங்களும் நீர் அரித்த கரிய மணலும் உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/189&oldid=1579398" இலிருந்து மீள்விக்கப்பட்டது