உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

157

அகன்ற மேட்டுக் குப்பங்களில் குடியிருக்கும் பெரிய கற்றத் தினையும் இனமான உறவினையுமுடைய வலிய தொழிலாள ரான செம்படவர் கடல் இறாமீனின் சுட்ட தசையைத் தின்றும், வயல் ஆமையைப் புழுக்கின இறைச்சியை உண்டும், வயலிற் படர்ந்த அடப்பம்பூவைத் தலையிற் கட்டியும், நீரில் நின்ற ஆம்பல்மலரைப் பறித்துக் சூடியும், நீலநிறத் தினையுடை ய வானத்தில் வலம்புறமாய் எழுந்து சுழன்று திரியும் நட்சத்திரங் களோடு கூடிய கிரகங்களைப் போலச் சண்டையிடாநின்ற அவ் வகன்ற மன்றத்திற் பலரும் ஒருங்கு திரண்டு கையொடு கைபிணைந்தும் படைக்கலங்களோடு படைக்கலந் தாக்கியும் ம்போடு உடம்புபட உரைசியும் மிக்க சினத்தோடும் ஒருவர் ஒருவர்க்குப் பின்னிடையாது பெருஞ்சண்டை செய்த அதனானும் வலியடங்காராய் ஒருவரோடொருவர் மாறுபட்டுக் கல்லை வீசுகின்றனர். அங்ஙனம் அவர் எறியுங் கவண்கல்லிற்கு மிக அஞ்சிப் பச்சென்ற பனைமரத்தின்மேலிருந்த பறவைகள் பறந்து போகின்றன.

6

(75-77) புறச்சேரியின் தன்மை

குட்டிகளையுடைய பன்றியும் பல கோழிகளும் உறை வைத்த சிறிய கிணறுகளும் இருக்கின்ற அச் செம்படவர் புறச்சேரியிலே செம்மறி ஆட்டுக் கிடாய்களோடு கௌதாரிப் பறவைகள் விளையாடா நிற்கும்.

(78- 105) காவிரித்துறைச் சிறப்பு

நட்டகல்லிற் றெய்வமாய் நின்றவனுக்குக் கேடகத்தை வரிசையாவைத்து வேலை நிறுத்தியவாறுபோல நீண்ட தூண்டியற்கோலைச் சார்த்திவைத்திருக்கும் குறுகின கூரையை யுடைய குடியிருப்புகளின் நடுவில், நிலவின் இடையிலே சேர்ந்த ருளைப்போல மீன்வலை யுலரும் வெள்ளிய மணல்பரந்த முற்றத்தின்கண், விழுதையுடைய தாழஞ்செடியின் கீழ் வளர்ந்த வெண்கூதாள மலராற் செய்த மாலையை யணிந்தவராய்ச் சினை கொண்ட சுறாமீன் கொம்பை நட்டு அதனையே இருக்குமிடமாக ஏற்றிய வலிய கடற்றெய்வத்தின் பொருட்டாக மடலையுடை தாழைமலரைக் சூடியும், பொரிந்த மரத்தினையுடைய பனையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/190&oldid=1579399" இலிருந்து மீள்விக்கப்பட்டது