உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மறைமலையம் - 9

பரந்த

கள்ளைக் குடித்தும், புல்லிய தலையினை யுடைய செம்படவர் பசிய தழையினை யுடுத்த தம்பெண்டிரோடும் பனிக்கடலில் மீன் பிடிக்கவுஞ் செல்லாது அத்தொழிலைவிட்டு முழுமதி விளங்கும் உவாநாளிலே தாம் வேண்டுவன உண்டு ளையாடியும், பின் புலால்நாற்றம் வீசுகின்ற மணலையுடை பூங்கானற்சோலையில் கரியமலையைப் பெருந்திக்கிடந்த செக்கர்மேகம் போலவும் தாயின் கொங்கையைத் தழுவிக்கிடந்த மகவைப் போலவும் தெளிந்த நீரையுடைய கடலொடு காவிரியாறு சென்று கலக்கும் மிகக் குளிர்ந்து முழங்கா நின்ற புகார் முகத்தில் தீவினைபோகக் கடல் முழுக்காடியும், பின் அவ்வுப்புநீங்க வேறுநீரிலே குளித்தும், நண்டுகளைப் பிடித்து ஆட்டியும், உலவுகின்ற அலையிற்போய் அதனை உழக்கியும், பாவை செய்தும், ஐம்பொறிகளானும் நுகரப்படுவன வெல்லாம் நுகர்ந்து மயங்கியும், அவர்கள் ஒருவரை யொருவர் நீங்காத காதற்கிழமை யுடையராய், இவ்வாறு பகற்பொழுதெல்லாம் போக்குதற்குக் காரணமாவதாய்ப் பெறுதற்கரிய பழஞ் சிறப்புகளையுடைய சுவர்க்க நாட்டை ஒப்பதாய் என்றும் பொய்யாமல் நீர் வருதலையுடையதாய்ப் பூக்கள் நிறைந்த காவிரித்துறை விளங்குமென்க.

L

(106 - 115) கடையாமச் சிறப்பு

தங்கொழுநரைப் புணர்ந்த அழகிய மங்கையர் பட்டாடை களைக் களைந்தெறிந்து வெண்டுகில் உடுத்தவராய்த் தேனுண் டலை விடுத்துக் காமவின்பச் சுவைத்தேனை நிறைய உண்ணா நின்று தங்காதலர் சூடிய மாலையைத் தமதென்றெடுத்துச் சூடிக்கொள்ளவும், தங் காதலிமார் மலைந்த கோதையைத் தமதென்று அவர் காதலர் அணிந்து கொள்ளவுமாக அவர் காமவின்பச் சுவை நுகர்கின்ற உயர்ந்த மாடங்களில் எரியும் விளக்கங்களைப் பார்த்து முன்வளைந்த கட்டுமரத்தைக் கடலிடத்தே கொண்டு சென்ற பரதவர் அவற்றை எண்ணா நிற்பவும், அந் நகரத்திலுள்ளார் இரவில் முன் யாமத்துப் பாட்டுக் கேட்டும் நாடகம் பார்த்தும் வெண்ணிலவிற் பெறும் பயன்களைத் துய்த்தும் கண்ணுறக்கம் பெற்ற கடையாம மென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/191&oldid=1579402" இலிருந்து மீள்விக்கப்பட்டது