உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

மறைமலையம் – 9 (142-158) அங்காடித் தெரு

பல

அணுக அணுகப் படிகள் தொடுக்கப்பட்டு அமைந்த நீண்ட ஏணிகள் சார்த்தியிருக்கும் சுற்றுத் திண்ணைகளும், கட்டுகளும், சிறுவாயில் பெருவாயில்களும், பெரிய இடை கழிகளும்3 பொருந்தச் சமைக்கப் பெற்றனவாய், நீர் முகில்கள் உராயும் உயர்ந்த மாடத்தில் சிவந்த அடியினையும் நெருங்கிய தொடைகளையும் பசிய அணிகலங்களையும் பெரிய அரையினையும் நுண்ணிய ஆடையினையும் பவளம் போல் நிறத்தினையும் மயில்போற் றோற்றத்தினையும் மான் போல் நோக்கினையும் கிளிபோலும் மழலைமொழியினையும் மெல்லென்ற சாயலினையும் உடையபெண்கள் தென்றற் காற்று

நுழையும் சாளரத்தைப் பொருந்தி நின்று, உயர்ந்த மலைப்பக்கத்தில் நுண்ணிய மகரந்தப்பொடியைச் சொரியும் காந்தட்செடியின் கணுக்களிலிருந்து கிளைக்கும் கவிந்த முகைக் குலையைப் போலும் தமது தொடி நெருங்கிய கையை மேலெடுத்துத் தொழா நிற்ப, முருகப் பிரானுக்கு வெறியாட்டு எடுக்கும் மகளிர்க்குப் பொருந்தப் பரம்பி வேய்ங்குழல் சைக்கவும் யாழ் ஒலிக்கவும் முழா முழக்கஞ் செய்யவும் முரசம் ஒலிப்பவும் திருவிழா இடையறாது நடைபெறும் அங்காடித் தெருவென்க.

(159-183) நகரிற் கொடிச் சிறப்பு

வக்கப்

குற்றமற்ற சிறப்பினையுடைய தெய்வத்தை ஏற்றுவித்த மலர்களணிந்த கோயில் வாயிலிலே பலருந் தொழுது செல்லுங் கோழிக்கொடியும், உணவுப் பொருள்கள் பட்டிருக்குங் கொழுவிய பேழையினைத் தாழிடுவித்துப் போற்றிய குளிர்ந்த பலபண்டங்களின்மேல் வெள்ளிய அரிசியைப் பலியாகச் சிதறிப் பாகாகக் காய்ச்சி வார்த்த பசிய மெழுக்கைப் பூசிய கோல்களை நாட்டி அவற்றின் மேற் கவித்திட்ட சட்டத்தின்மேல், வருகின்ற நீராற் றிரட்டிச் சேர்க்கப்பட்ட வெண்மணல் நிரம்பிய காட்டியாற்றின் கரை மருங்கில் நின்ற அழகிய கரும்பின் ஒண்பூப்போலத் தோன்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/193&oldid=1579406" இலிருந்து மீள்விக்கப்பட்டது