உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

161

படியாக நட்ட துகிற்கொடியும், பலவாகிய நூற் கேள்விகளில் துறைபோகக் கற்றமையானே தொன்று தொட்டுப் பிறரை ஏவுவதற்கு உரிமைவாய்ந்த நல் ஆசிரியராயுள்ளார் வழக்கிட்டுப் பிறர்க்கு மெய்ப்பொருள் தெருட்டுதற் பொருட்டு நாட்டிய அச்சந்தருங் கொடிகளும், கட்டுத் தறியை அசைக்குங் களிறுபோலக் காண்பார்கட்கினிய காவிரிப்பூம்பட்டினக் கடற்றுரை முகத்தில் நெருங்கி நின்று அசையும் மரக்கலங் களின்மேற் கட்டிய கொடிகளும், மீனையும் இறைச்சியையும் அறுத்து அவற்றின் ஊனை நெய்யிற் பொரிக்கின்றமையால் ஆரவாரம் நிறைந்த முற்றத்திலே மணலைக் குவித்து மலரைச் சிதறிக் கள்ளுண்பார் பலரும் நுழைதற்குக் காரணமான கள்ளுக் கடையின் பலிதரப்பெற்ற வாயிலிலே கள்ளுவிற்றலை யறிவித்தற்கு அறிகுறியாகக் கட்டிய கொடியும், ஆகிய இவற்றோடு இன்னும் வேறு வேறு கொடிகளும் மிக்க கலவாநிற்பப் பல்வேறு உருவாற் சிறந்த பெருங்கொடிகளும் நிறைந்தமையால் அவற்றின் நீழலிலே ஞாயிற்றின் கிரணங்களும் நுழையக் கூடாதனவான வளம் பொருந்திய நகர் என்க.

(183-193) தெருக்களிலுள்ள பொருள்வளம்

கெடாத

இப்பெற்றித்தான நகரத்தின் எல்லையில் நற்புகழையுடைய தேவர்கள் காவலாய் நிற்கின்றமையால் இடையூறு சிறிதுமின்றிப் பிறநாட்டிலிருந்து கடல் வழியே நாவாயிற் கொண்டுவந்த நிமிர்ந்து விரைவாய்ச் செல்லுங் குதிரைகளும், வட்டையிலே கொண்டுவந்த கரிய மிளகுப் பொதிகளும், வடக்கே இமயம் மேரு முதலிய மலைகளினின்றுங் கொண்டு வந்த பலதிறப்பட்ட மணிகளும் பொன்னுருக்குக் கட்டிகளும், குடகுமலையினின்றும் வந்த சந்தனக்கட்டை அகிற்கட்டைகளும், தென்கடலிற்குளித்து எடுத்து வந்த முழுமுத்துகளும், கீழ்கடலிற் றுருவிக் கொண்டு வந்த செம்பவளங்களும், கங்கையாற்றிற் பிறந்த பொருள்களும், காவிரியாற்றின் பொருள்களும், இலங்கைத் தீவினின்றும் போந்த உணாப் பொருள்களும், கடாரத்தினின்று கொணர்ந்த நுகர்ச்சிப் பொருள்களும், இவையேயன்றி யின்னும் பல அரிய பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/194&oldid=1579409" இலிருந்து மீள்விக்கப்பட்டது