உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மறைமலையம் - 9

பண்டங்களும் நிலந் தாங்கமாட்டாமல் நெளியும்படி ஒருங்கு தொக்கமையினாலே பலவகைப்பட்ட பொருள்வளங் களும் ஒன்றோடொன்று அளாய அகன்ற தெருக்களென்க.

(193-212) வேளாளர் குடிச்சிறப்பு

இத் தன்மைத்தாகிய தெருவினும், துறைமுகத்து நடுவினும், கடற்கரை மருங்கினும் மகிழ்ந்து இனிது உறங்கிச் சுற்றம் தழைத்துத் தமக்குப் பகையாவார் இவரென்று எண்ணாது வலைஞர் முன்றிலிலே மீன் பாயவும் ஊன்விற்பார் குடிசையிலே ஆடு முதலான விலங்குகள் திரண்டு நிற்கவும் ஆக இவ்வாறு காலைபுரிவாரை அதனினின்று நீக்கியும், களவு காண்பாரை அதனினின்று நீக்கியும், தேவரைப் போற்றியும், ஆரியர் உவக்கும்படி அவர் வேண்டும் வேள்விகளை வேட்டு அவரை நுகர்வித்தும், நல்ல ஆக்களோடு எருதுகளைப் பாதுகாத்தும், நான்மறை வல்லோர்க்கும் உண்டாம் புகழை நிலைபெறச் செய்தும், வரும் விருந்தினர்க்கு நுகர்தற்குரிய பல பண்டங்கள் கொடுத்தும் பசிய சோறு கொடுத்தும் அறவொழுக்கம் பிறழாது யார்க்கும் குளிர்ப்பக்கூறி அன்பு சுரக்கும் வாழ்க்கையின்கண் நிலைபெற்ற வளைந்த கலப்பையின் உழவு தொழிலையே நச்சுகின்ற வேளாளர் தமது நீண்ட நுகத்திற் றைத்த பகலாணி போல் நடுநிலை திறம்பாது நின்ற நல்ல நெஞ்சினையுடையராய்த் தமக்குந் தங்குடிக்கும் வடுவாமென்றுணர்ந்து பொய்யை யொழித்து மெய்ம்மையே கூறித் தம்முடைய பண்டங்களையும் பிறருடைய பண்டங்களையும் ஒரு பெற்றியாகக்கண்டு, தாம் பிறரிடத்து அப் பண்டங்களை விலைகொள்ளும்போதுமிகுதியாகக் கொள்ளாமலும், தம் பண்டங்களைப் பிறர்க்கு விலையிடுங்காற் குறையக்கொடாமலும் ஊதியத்தை வெளிப்படையாகச் சொல்லி விற்று இந் நெறியே தொன்றுதொட்டு வரம்பின்றிப் பொருள் தொகுத்து அவர் நெருங்கியிருக்குங் குடியிருப்பு என்க.

(213-218) காவிரிப்பூம்பட்டினச் சிறப்பு முடிபு

வேறுவேறாகச் சிறந்த அறிவு வாய்த்த சுற்றத்தினை யுடைய நன்மக்கள் திருவிழாக்கொண்டாடும் பழைய ஊரிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/195&oldid=1579410" இலிருந்து மீள்விக்கப்பட்டது