உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

163

சென்று கூடினாற்போலப், பல்வேறு வகைப்பட்ட மொழிகள் வழங்குவோராய்க் குற்றமற்ற பலநாடுகளினின்றும் வந்த மக்கள் எல்லாரும் சென்று தன்கண் உள்ள நன்மக்கள் கூட்டம்பலவோடும் பழகிக்கலந்து உறையும் வழுவாத சிறப்பினையுடைய காவிரிப்பூம்பட்டின மென்க.

(218-220) பாட்டிற் கருக்கொண்ட பொருள்

இவ்வியல்பினதாய்ச் சிறந்த காவிரிப்பூம்பட்டினத்தையே எனக்கு உரிமைப்பொருளாகப் பெறுவேனாயினும் ஏ நெஞ்சமே! நீண்ட கருங் கூந்தலினையும் விளங்கும் பூணினையுமுடைய என் ய காதலி ஈண்டுத் தனியளாயிருப்ப இவடன்னைப் பிரிந்து வருதற்கு ஒருப்படமாட்டேன் கண்டாய் என்க.

(220 - 239) கரிகாற் பெருவளத்தான், தன்னைச் சிறைசெய்த

(பகைவரைத் தப்பிப்போய் அவரை வென்றமை.)

கூரிய நகத்தினையுடைய புலிக்குட்டியானது கூட்டில் அடைபட்டு வளர்ந்தாற்போலப் பிறரிட்ட சிறைக் காவலிற் றங்கியிருந்து அதனாற் றன் பெருமைக்குணம் வயிரமேறி முற்றுதலானே, குழியில் வீழ்ந்த களிற்றியானை அதன் கரையைக் கொம்பாற் குத்தித் தூர்த்துத் தன் பிடியினிடத்தே சென்று சேர்ந்தாற்போலத் தன்னுணர்வாற் கூர்த்தறிந்து பார்த்துப் பகைவரது காவலமைந்த சிறைக்களத்து வலிய மதிலைத் தாண்டிப் புறத்தே நின்ற வாட்படை வீரரையெல்லாம் ஒட்டிப் போய்ப் பகைவர்க்கு அச்சத்தை விளைக்குந் தன்னரச வுரிமையை முறையே பெற்றும், அங்ஙனம் பெற்ற அவ்வளவில் உள்ளம் மகிழ்தல் பெறானாய்ப் பின்னும் மண்கொளல் வேண்டு மென்றெழுந்த நசையால், பகைவருடைய காவலமைந்த அரண்களை அழித்துக் கதவைக் குத்தி யேந்தின மருப்பின தாய்ப் பகைவரது முடிசூடிய பெருந்தலையை உருட்டும் முன்றாளில் நகங்கள் பொருந்தப் பெற்ற அடிகளையுடைய யானையோடும் தடித்தமணிகள் கட்டிய குதிரையோடும் படையெடுத்துச் சென்று மாற்றார்தம் படைமறவர் போர்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/196&oldid=1579411" இலிருந்து மீள்விக்கப்பட்டது