உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மறைமலையம் – 9

களத்து விழவும், பெரிய வானத்தின்கட் பருந்துகள் உலாவவும், தூறுபடர்ந்த கருங்கற் பாறைபோற் போர்வேண்டியெழுந்தமைக்கு அடையாளமாகப் பூளைப்பூவும் உழிஞைப்பூவுஞ் சூடிப் பேயின்கண்ணைப் போன்ற முழங்கும் போர்முரசம் அகன்ற பாசறையிலே அதிர்ந்து முழங்காநிற்பச் சென்று பகைவர் இடங்கள் பாழாகும்படி அவரை முதற்போரிலே தோல்வி பெறச்செய்து, அவ்வளவிற் சினம் மாறாது மேலும் போய் அவர் அரண்களை அழித்து நடந்து குளிர்ந்த மருத நிலத்துக் குடிகளைத் துரத்தி என்க.

(240-245) மருதநிலம் பாழ்பட்டமை

அங்ஙனமெல்லாம் அப் பகைவரூரைப் பாழ்படுத்தினமையால் முன்னே வெள்ளியபூவினையுடையகரும்பும் செந்நெல்லும் நீண்டு கரிய இதழ்க்குவளையொடு நெய்தற்பூவுங் கலந்து முதலைகள் செருக்கித்திரிந்த டம் அகன்ற செழும் பொய்கை களெல்லாம், இப்போது கொழுந்தண்டுகளை யுடைய அறுகும் கோரைப்புற்களும் அடர்ந்து நீர் அற, இவ்வாறே வயலும் வாவியும் வேறுபாடின்றித் தந்தன்மை திரிந்திட, அறுப்புள்ள கொம்புகளையுடைய புல்வாய்க்கலைகளொடு மான் பிணைகள் ஆண்டுத் துள்ளிவிளையாடும் பாழ் இடமாயின.

L

(246-251) அம்பலங்கள் பாழ்பட்டமை

தாம் தம் பகைவர் மகளிரைச் சிறையாகக் கொண்டு வந்தமையின், அம் மகளிர் நீருண்ணும் துறையிலே முழுகி வந்து மாலைப்பொழுதிலே கொளுத்திய விளக்கினை யுடையதாய் மலர் அணியப்பட்ட மெழுகின இடத்திலே ஏறிச்சென்று உள்ளூரார் பலர் தொழுது செல்லவும், வெளியூரினின்று புதியராய் வந்தார் தொழுதுதங்கவும் அமைக்கப்பட்ட அருட்குறி நிறுத்திய அம்பலங்களெல்லாம் தங்கண் நின்ற பருத்த தூண்கள் சாயும் படியாக உராய்ந்து களிற்றி யானையொடு பிடியானையுங் கூடியிருக்கும் இடமாயின என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/197&oldid=1579413" இலிருந்து மீள்விக்கப்பட்டது