உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

(252-260) மன்றம் பாழ்பட்டமை

165

மிக்க விலையினையுடைய நறியமலர்களைத் தூவித் தெருவில் நின்று அறிவுவாய்த்தலையுடைய கூத்தர் முழவுக்கு சைய முறுக்கின நரம்பையுடைய யாழிசை கேட்கும் பெரிய திருவிழாக்கள் இல்லையாய்ப்போன அச்சம் மிகுந்த மன்றங்கள் சிறிய பூக்களையுடைய நெருஞ்சிற் பூண்டும் அறுகம்புல்லும் பம்ப அழன்ற வாயினையுடைய நரிகள் ஊளையிடவும், அழுங்குர லாய்க் கூப்பிடும் கூகைகளொடு கோட்டான்களுமிருந்து எதிர் கூவவும், தொகுதி கொண்ட ஆண்பேய்களொடு மயிரை அவிழ்த்துக் தொங்க விட்டு இருந்து பிணத்தைத் தின்னும் பெண்பேய்கள் கூடவும் ஆயின என்க.

(261-268) நகர் பாழ்பட்டமை

வளைந்த கால்களாய்க் கட்டப்பெற்ற நீண்ட மாடத்தின் றலைக்கடையிற் சென்று நெருங்கி விருந்தினர் இடையறா துண்டும் குறையாத பெருஞ்சோற்று வளம்நிரம்பிய அடுக்களை வாய்ந்து ஒளிபொருந்திய சுவர்களமைந்தவான நல்ல இல்லங் களின் உயர்ந்த திண்ணைகளின் மேலிருந்து பைங்கிளி இன்சொல் மிழற்றுதற்குக் காரணமான பால் நிறைந்த செழுவிய நகரம், செருப்பிட்ட அடியினையுடையராய்த் துடியொலிப்பத் திரண்டசென்று வளைந்த வில்லையுடைய வேடர் கொள்ளை காண்டு உண்டுவிட்டமையினாலே உணாவின்றி வறிதாய்ப் போன நெற்கூடுகளின் உள்ளிருந்து வளைந்த வாயினையுடைய கூகைகள் நண்பகற் காலத்துங் குழறும்படியாயிற்று.

(269-299) கரிகாற் பெருவளத்தான் வெற்றித்திரு

இங்ஙனமெல்லாம் புகுதற்கு அரிய காவலமைந்த மதில்சூழ்ந்த பகைவர் ஊர்களையெல்லாம் பெரும்பாழ் செய்தும் அதனாலும் அவர்மேற்கொண்ட செற்றம் தணியப் பெறானாய்த் தெய்வத்தன்மை பொருந்தியவனாதலின் ‘இவன் மலைகளை யெல்லாம் கல்லுவன், கடலைத் தூர்ப்பன், வானை விழச்செய்வன், காற்றை இயங்காமல் விலக்குவன்' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/198&oldid=1579414" இலிருந்து மீள்விக்கப்பட்டது