உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மறைமலையம் – 9

இவ்வாறெல்லாம் உலகத்தாரெல்லாரும் மீக்கூறும்படி தான் நினைத்தவற்றை அந் நினைத்தவாறே துறைபோக முடித்தல் வல்லவனாகலின், ஒளிநாட்டார் பலரும் வந்து தாழ்ந்து ஒடுங்கவும், பழைய அருவாள நாட்டினரசர் அவன் ஏவிய தொழிலைச் செய்தற்கு அவன்சொற் கேட்பவும், வட நாட்டிலுள்ள ஆரிய அரசர் வாடவும், குட நாட்டிலுள்ளார் மனவெழுச்சி குன்றவும், பாண்டியன் வலிகுறையவுஞ் சீறி, மன்னர்தம் நிலைபெற்ற மதிலைக்கைப்பற்றும் மதமுடைத்தாய்வலிய தாளினையுடைய யானைப்படையும் மறத்தாற் சிறந்த வலிமையும் வாய்ந்தவனாய்ச் சினத்தாற் சிவந்த கண்களால் வெகு வகுண்டு பார்த்துப், புல்லிய இடைய அரசரது கால் அழிந்துபடவும், இருங்கோவேள் சுற்றத்தார் கெடவும், காட்டையெல்லாம் அழித்து நாடாக்கிக் ‘குளங்கள் அகழ்வித்துப் பலவளங்களும் பருகச் செய்து, விளங்கும் மாடத்தினையுடைய உறையூரை டுத்து, ஆண்டுக் கோயில்களையுங் குடிகளையும் நிலைபெறச் செய்து சிறுவாயிலும் பெருவாயிலும் அமைத்து, மதில்களில் அம்பெய்யும் குருவித்தலைகடோறும் அம்புக் கட்டுகளைப் பொருந்த வைத்துப், பகைவர் யாவராயினும் அவரொடு பொருதற்கு நேர்ந்துள்ளேமென வஞ்சினங் கூறிப், பின் அதனினின்றும் பிறழமாட்டேமென்னும் உறுதியுடைமை யினாலே முதுகுகாட்டிப் போகாது வீரத்திருமகள் என்றும் நிலைபெற்ற பெரிய மதிள், மின்போல் ஒளிவீசுதலால், இவனைப் பணிதற்கு வந்த வாரிறுக்கின முழவினையுடைய மற்றை அரசர் தம் ஒளிமழுங்கப் பெற்றாராய்ப், பின் இவன் அருணோக்கத் திற்குத் தக்காராகல்வேண்டி இவனைப் பணிதலால் அவர் முடிகளிற்குயிற்றிய மணிகள் உரிஞ்சிய மிக்க வலியினையுடைய வீரக்கழல் கட்டின காலினையும், பொற்றொடி யணிந்த தன்புதல்வர் ஓடி விளையாடவும் தொழில் முற்றுப் பெற்ற அணிகலன்கள் அணிந்த தன் மனைவிமாரின் முகிழ்ந்த கொங்கைகள் தழுவவும் செஞ்சந்தனக் குழம்பு கலைந்த மார்பினையும், ஒள்ளிய பூண்களையும் உடை யனாய்ச் சிங்கவேற்றை யொத்துப் பகைவர்க்கு வருத்தத்தை விளைக்கும் வலியினனாக, கரிகாற் பெருவளத்தான் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/199&oldid=1579417" இலிருந்து மீள்விக்கப்பட்டது