உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

4. பாலை

பாலையென்பது பிரிதலும் பிரிதல் நிமித்தமும் உணர்த்தும் அகொழுக்கமாம். தன் மனக்கினிய காதலியை மணந்து கொண்டு தலைமகன் இல்லிருந்து இல்லறம் நடாத்துங்கால், வேற்றுநாட்டிற் சென்று பொருடேடலைக் கருதித் தன் மனைக்கிழத்தியைப் பிரிந்து போதற்குக் குறித்தவழி, அக் குறிப்பினை அறிந்த அவன் காதலி அவனைப் பிரிதற்கு ஆற்றாளாய் மிக வருந்தாநின்றனள். அவ் வருத்தத்தைக் கண்டு அவளைப் பிரியப் பெறானாய்த் தன்நெஞ்சை நோக்கி, “முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும், வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய, வாரேன் வாழிய நெஞ்சே” என்று று கூறித் தான் செல்லுதல் தவிர்ந்தான். இங்ஙனஞ் செலவு தவிர்ந்தது, இப்போது ஆற்றாளான இவளைப் பலதிறத்தானும் அறிவுறுத்தி ஆற்றிப் பின் பிரிதற் பொருட்டேயாம். ஆகவே, இப்போது தான் பிரிதலை யொழிந்தது பின் பிரிந்து போதற்குக் காரணமாகையால் இப்பாட்டுப் ‘பிரிதல் நிமித்தத்' தின்கண் வந்த பாலையொழுக்கத்தை விளக்குவதாயிற்றென்க. இதனை ஆசிரியர் தொல்காப்பியனார்,

"செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே வன்புறை குறித்த றவிர்ச்சி யாகும்.

என்று கூறியவாற்றானுங் காண்க.

وو

அடிக்குறிப்பு

1.

பொருளதிகாரம், கற்பியல், 44.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/201&oldid=1579422" இலிருந்து மீள்விக்கப்பட்டது