உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

5. வாகை

பாலை என்னும் மக்கள் அக ஒழுக்கத்தைக் கூறுகின்ற இப்பாட்டின்கண் அவரது புறஒழுக்கமுங் கூறல் வேண்டின் அப்பாலையென்னும் அகவொழுக்கத்தோடு இயைபுடை வாகை என்னும் புறவொழுக்கமே கூறற்பாற்றாம். என்னை? “வாகை தானே பாலையது புறனே" என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாராகலின் என்க. அவை இரண்டும் அங்ஙனம் இயைபுடையவா றென்னையெனின்; 'வாகை' என்பது ஒருவர் தம் திறத்தினை ஏனையோரின் மிக்குத் தோன்ற விளக்குதலாம்; எனவே, இஃது ஒருவர்க்கு உளதாம் வெற்றி என்னும் புறவொழுக்கத்தை உணர்த்துவதென்பது இனிது பெறப்படும். ‘பாலை' என்பதுங் காதற் கிழமையிற் சிறந்த தன் காதலிபாற் சன்ற அன்பின் வழியே ஒழுகி அவளிடத்தே தங்கியிராது, இல்லற வாழ்க்கையினை இனிது நடப்பித்தற்கு இன்றியமையாது வேண்டப்படும் நன்பொருள் திரட்டுதற்பொருட்டு அவள்மேற் சென்ற அன்பினை அடக்கி வெற்றிகண்டு தலைமகன் பிரிந்து போதலை உணர்த்துவதாம். ஆகவே, அகத்தே நிகழும் அன்பை வெற்றிகாணும் ‘பாலையும்’, புறத்தே நிகழும் பகைவர் மறத்தை வெற்றிகாணும் ‘வாகை’யுந் தம்முள் ஒப்புமை யுடையவாதல் தெற்றெனப் புலப்படும்.

இனித் தன்காதலிமாட்டுச் சென்ற காதலை அடக்கிப் பிரிதற்கு எழுந்த தலைவன் அவள் மிக வருந்துதல் கண்டு இரங்கி அவளை ஆற்றுதற்குத் தங்கி 'பாலை' ஒழுக்கத்தைக் கூறும் இப்பாட்டின்கண் ‘வாகை' என்னும் புறஒழுக்கம் யாண்டுக் கூறப்பட்டதெனிற் காட்டுதும்; கரிகாற்சோழன் தன் இளம் பருவத்தே பகைவர் இட்ட சிறைக்களத்தில் இருந்தபோது, அவரை வெல்லும் வகையெல்லாம் நினைந்து பார்த்துப் பின் அச்சிறைக்களத்தினின்றும் அஞ்சாது தப்பிப்போய்த் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/202&oldid=1579425" இலிருந்து மீள்விக்கப்பட்டது