உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

181

யிட்டுப் போக்கித் தங்கடமை வழாது செய்தலும்,பண்டசாலை முற்றங்களிலே மலைபோல் அடுக்கப்பட்ட மூட்டைகளின்மேல் நாயும் ஆட்டுக்கிடாயும் ஏறி விளையாடுதலும், நகரத்திலுள்ள மகளிர் முருகவேள் திருவிழாவைக் கண்டு தொழுதற் பொருட்டு மேல் மாடங்களிற் சாளரவாயிலைப் பொருந்தி நின்று கை கூப்புதலும், அந் நகரமெல்லாம் பலதிறப்பட்ட கொடிகள் நாட்டப்பட்டு விளங்குதலும், பருமாவிலிருந்து வந்த குதிரைகள் மலையமாநாட்டிலிருந்து வந்த மிளகு பொதிகள் இமயமலையி லிருந்து வந்த பலவகை மணிகள் பொதியமலையிலிருந்து வந்த சந்தன அகிற்கட்டைகள் இலங்கைக் கடலில் எடுத்த முத்துகள் கீழ்கடலினின்றுங் கொணர்ந்த பவளங்கள் கங்கை காவிரி ஈழம் முதலிய விடங்களிலிருந்து வந்த உணவுப் உணவுப் பொருள்கள் முதலியனவெல்லாம் கடைத்தெருவுகடோறுந் தொகுக்கப் பட்டிருத்தலும், புலான் மறுத்துப் பொய்யாவொழுக்க மேற்கொண்டுவாழும் வேளாளர் பலதிறப்பட்டார்க்கும் உதவி புரிதலும், பலதேயத்தினின்றும் வந்த மக்கள் ஒருவரோடொருவர் அளவளாவியுறைதலும், கரிகாற் சோழன் பகைவரிட்ட சிறைக்களத்தினின்றுந் தப்பிப்போய்ப் பின் அப் பகைவர்மேற் படை திரட்டி வந்து வந்து அவர் நாடு நகரங்களைப் பாழ்படுத்தினமையால் அவருடைய பொய்கைகள் மன்றங்கள் அரண்மனைகள் நகரங்கள் முதலியனவெல்லம் வெறும் பாழாய்க் கிடத்தலும், அங்ஙனம் வெற்றியிற் சிறந்து போந்து தன் நகரத்தில் அத்தாணி மண்டபத்தே அவன் அரசு வீற்றிருக்குங்காற் பலதேய மன்னரும் போந்து அவன் மருங்கிருந்து அவனேவிய தொழில் கேட்டு நிற்றலும், பகைவர்க்கு இன்னனாயினும் தன்னோ டொருமையுடையாரிடத்து அவன் மிக்க அன்புடையனா யொழுகுதலும் பிறவும் நம் மனக் கண்ணெதிரே அரும்பெறல் ஓவியமெழுதிக் காட்டினாற்போல் அழகு கனிய விளக்கிக் காட்டியவாறுங் காண்க. இங்ஙனம் உலகவியற்கைப் பொருள் களுள்ளும் அழகான் மிகச் சிறந்தவற்றையே தெரிந்தெடுத்து அவை தம்மைத் தமது நுண்ணறிவால் பொருந்தக் குழைத்துத் தம் அருமைத் திருமொழிகளால் நம் நெஞ்சப்படாத்தில் அமைதி பெற வரைந்து பட்டினப்பாலை இயற்றிய ஆசிரியர் உருத்திரங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/214&oldid=1579455" இலிருந்து மீள்விக்கப்பட்டது