உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185

10. இப்பாட்டின்கட் டோன்றிய பழையநாள் வழக்க வொழுக்க வரலாற்றுக் குறிப்புகள்

இந்நூலுட் பௌத்த சமண்குருக்கள் உறையும் மடங்கள் குறிக்கப்பட்டிருத்தலால், இஃது எழுதப்பட்ட காலத்துப் து பௌத்தசமண்மதங்கள் நிரம்பவும் பரவியிருந்தனவென்பது இனிதறியப்படும். இந் நூல் எழுதப்படுதற்கு இரு நூறு ஆண்டு களுக்கு முன் செங்கோல் ஒச்சிய அசோகன் என்னும் பௌத்த வேந்தன் பெளத்த ஆசிரியர் பலரைப் பலதிசைகளுக்கும் பலதேயங்களுக்குஞ் செலவிடுத்து ஆங்காங்குப் பௌத்தசமய அறவுண்மைகளை மிகவிரித்து விளக்கி அவைதம்மை நிலை பெறுவித்து வந்தானென்பதும், சேரசோழபாண்டியமன்னர் அரசு புரிந்த தமிழ்நாட்டிலும் அங்ஙனமே அச்சமயம் நிலை நாட்டப்பட்டதென்பதும் அவ்வசோகமன்னன் செதுக்கிய கல்வெட்டுக்களால்' நன்கு புலப்படுதலானும், இந் நூலெழுதப் பட்டபின் நானூற்றைம்பது ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு வந்த பாகியான் என்னுஞ்சீன ஆசிரியர் காலத்திலெல்லாம் பௌத்த சமயம் மிகவுஞ் செழிப்புற்றிருந்ததென்பது அவ்வாசிரியர் வரைந்து வைத்த வழிநடைக் குறிப்புகளால் இனிது துணியப் படுதலானும் அசோகன் காலத்திற்குச் சில நூற்றாண்டு பிற்றோன்றிய இந் நூலின்கண் அப் பௌத்தமடங்கள் குறிப்பிக்கப்பட்டமை மிகவும் பொருத்தமுடைத்தேயாமென்க.

L

அற்றேல், சமண்மதமும் அப்போதிருந்த தெனக் கூறிய தென்னையெனின்; பௌத்தசமயம் நிலவிய காலத்து அதனொடு சமண்மதமும் உடன் நிலாவிற்றென்பதற்கு மிகப்பழையவான சைனசூத்திரங்களும்? மணிமேகலைக் காப்பியமும், பௌத்தர் அறிவுரைகளுமே சான்றாமாகலின் அதுவும் முன்னிருந்தமை துணிபொருளேயாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/218&oldid=1579464" இலிருந்து மீள்விக்கப்பட்டது