உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

மறைமலையம் – 9

னி, ஆரியமுனிவர் பலர் பிராமணங்களிற் சொல்லப் பட்ட வேள்விகள் பல வேட்டுவந்தன ரென்பதும் இதன்கட் குறிக்கப்பட்டிருக்கின்றது. போர்க்களத்தில் அஞ்சாது எதிர்நின்று போர்மலைந்து பகைவன் வாளாற் போழப்பட்டு இறந்த அரிய மறவனை நினைவுகூர்தற் பொருட்டு அவனைப் போல் உருத்திரட்டிய கருங்கல்லை நட்டு அதற்கெதிரிலே அவனுடை வேற்படையினை ஊன்றிப் பரிசையைத் தொங்கவிடுதல் வழக்கமாயிருந்தது; ஆசிரியர் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரும் “என்னைமுன் நில்லன்மின் றெவ்விர் பலரென்னை, முன்னின்று கன்னின் றவர்” என்று இவ்வழக்கத்தைக் குறித்திருக்கின்றார்; சிலப்பதிகாரத்திலுஞ் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல்நிறுத்தினமை

என்னுஞ் சேரமன்னன்

விரித்துரைக்கப்பட்டிருக்கின்றது.

இனி, இற்றைஞான்றிற் போலவே, காவிரிப்பூம்பட்டினக் கடற்றுறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் பண்டங்களை யெல்லாம் பாதுகாத்து அவற்றிற்குக் கடமை இவ்வளவென்று வரம்பறுத்துச் சோழவேந்தன் அடையாளமான புலிமுத்திரை யிட்டுச் சுங்கங்கொள்வோர் தந்தொழில் மாறாது செய்து வந்தனர். தனால் இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்னரே தமிழரசர் செலுத்திய செங்கோலரசு முறைகள் மிகவுந் திருத்தமாகவும் ஒழுங்காகவும் நடைபெற்று வந்தமை நன்கு புலனாகின்றது.

னி, அக்காலத்து வீடுகள் படிகள்வைத்துக் கட்டப் பட்ட உயர்ந்த திண்ணைகளும் பலகட்டுக்களுஞ் சிறுவாயில் பெருவாயில் இடைகழி முதலியனவும் அமைந்தனவாயும் மேல்மாடங்கள் பல உள்ளனவாயும் இருந்தன. மேன்மாடங் களிற் செல்வமகளிர் இருந்தமை விளங்குகின்றது.

இனிக் காவிரிப்பூம்பட்டினம் முதலான நகரங்களிலும் நாடுகளிலும் முருகக்கடவுளை வழிபடுதலும் அவர்க்குத் திருவிழாக் கொண்டாடுதலுமே பெரும்பான்மையா யிருந்தன. இதற்குத் திருமுருகாற்றுப்படை முதலான பழைய நுல்களுஞ் சான்றாம். எனவே, முருகக்கடவுள் வழிபாடு மிகவுந் தொன்றுதொட்டு நடைபெறுவதென்பது பெறப்படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/219&oldid=1579467" இலிருந்து மீள்விக்கப்பட்டது