உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

187

இனி, அக்காலைக் காவிரிப்பூம்பட்டினத்தில் வாணிகம் பெருகுங் கடைத்தெருவுகள் பலவிருந்தன. அவற்றில் அரிசிப் புரைகள், சரக்கு அறைகள், பாக்கு வெற்றிலைக் கடைகள், மெழுக்குப்பொதிந்த பேழைகள், கள்ளுக் கடைகள், மலையநாட்டு மிளகுபொதிகள், மேரு இயம் முதலான வடமலைகளினின்றுங் கொணர்ந்த மணிகள் பொற்கட்டிகள் விற்குங் கடைகள், குடகுமலையிலிருந்து வந்த சந்தனக்கட்டை அகிற்கட்டை குவித்த மளிகைக் கடைகள், இலங்கைக்கடல் முத்து வங்காளக்கடற் பவளம் கங்கையாற்றுப் பொருள்கள் கடார தேயத்து உண உணாப்பொருள்கள் சீனத்துப் பட்டுகள் என இவையெல்லாம் நிறைந்த பெருங்கடைகள் ஆகிய பலவும் நிரம்பி நெருங்கி இருந்தன. இன்னும் பர்மாதேயத்திலிருந்து வந்த குதிரைகள்

பட்ட ன.

பந்தியிற்

கட்டப்பட்டு

விலைசெய்யப்

இன்னும் அந் நகரத்தில், பல நூல்களுந் துறைபோகக் கற்ற அரும்பெறல் ஆசிரியர் பலர் ஒருங்கு சேர்ந்து வழக்காடிப் பொருளாராய்ந்து இன்புறுங் கலைக்கழகங்களும்' இருந்தன.

இனிக் காவிரிப்பூம்பட்டினத்திற், கொலைத்தொழில் நிகழாவாறு செய்து புலான்மறுத்து வாய்மைபேசுதலையே ஒழுகலாறாய்க் கொண்டு தேவர்க்கு வழிபாடு இயற்றியும், ஆரியர்க்குப் பொருளுதவி பல புரிந்து அவர் வேட்கும் வேள்வி களை நடப்பித்தும், நான்மறையோதுவாரை அது திறம்பாது செய்யுமாறு நிலைநிறுத்தியும், உலகு நிலைபெறுதற்கான தம் உழவுத்தொழிலைச் சிறக்க நடைபெறுவித்தும், கொள்வதும் மிகைபடாமற் கொடுப்பதுங் குறைபடாமல் வாணிகம் நடாத்தியும் புகழ்மேம்பட்ட பழைய வேளாளர் குடியிருப்புகளும் இருந்தன. இதனால், பண்டைநாளில் வேளாளர் பெருஞ் சிறப்புற்றிருந் தார்களென்பதும், ஏனைக் குடிமக்களெல்லாரும் இவர்களுடைய பேருதவியால் உயிர் வாழ்ந்திருந்தன ரென்பதும் நன்கறியப்படுகின்றன.

இனித் துருக்கிதேசத்துச் சோனகர் சீனர் யவனர் முதலான பல தேயமக்களும் தமக்குரிய பல மொழிகளும் வழங்கிக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தில் வந்து வாணிகம் நடாத்தி வாழ்ந்தனர். இவரெல்லாம் இங்ஙனம் இந்நாட்டிற் குடியேறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/220&oldid=1579468" இலிருந்து மீள்விக்கப்பட்டது