உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

  • மறைமலையம் – 9

வாழ்ந்தபோது தமக்குள் மாறின்றி ஒருமையுற்றிருந்தன ரென்பதும் இதனாற் றெரிகின்றது.

னி, முன்னாளில் ஓர் அரசன் பிறனோர் அரசனொடு பொருது அவனை வென்றால் அவன் நாட்டிலுள்ள மகளிரைச் சிறைபிடித்து வருதலுண்டென்பதும், அங்ஙனம் பிடித்தவரினும் அவரைக் கற்பழித்து மானஞ் சிதைத்து வருத்தாமல் பாதுகாத்துக் கோயில்களிற் கடவுளைத் தொழுது கொண்டு அங்கு கடவுட்டிருப்பணி செய்யும்படி இருத்துவர் என்பதும் அறியப்படுகின்றன. இதனாற் பண்டை நாட் டமிழரசரின் செங்கோன்மை யரசும் உள்ளப் பெருமையும் இனிது விளங்கற்

பாலன.

இனி, முன்னாளில் கடவுளைத் தொழுதல் வேண்டிச் சமைக்கப்பட்ட கோயில்கள் 'அம்பலங்கள்’ என்னும் பெயருடையவாயிருந்தன. அவற்றின்கட் கடவுளை வழிபடுதற்குத் தொழுகுறியாக நிறுத்தப்பட்ட உரு கந்து எனப் பெயர்பெற்றது. அவ்வுருவினையே இக் காலத்திற் 'சிவலிங்கம்' என வழங்கி வருகின்றனர். இந் நாளிற்போல அந்நாளில் மக்களுருவை யொப்பச் செய்த திருவுருவங்கள் பெரும்பாலுங் கிடையா. 'சிவலிங்கம்' எனப்படுகின்ற கந்து உருவையே வழிபட்டுவந்தனர். இச் சிவலிங்க உருத்தான் மிகப் பழையநாட் டொட்டு எல்லாச் சாதியாரானும் எல்லாத் தேயத்தாரானும் வணங்கப்பட்டு வந்ததென வரலாற்று நூலாராய்ச்சி வல்ல புலவோர்கள் உரைநிறுவுகின்றனர். இதனாலன்றே சிவபிரான் றிருக்கோயில் கடோறும் முதன்மையான இல்லில் இச் சிவலிங்க அருட்குறியும், முதன்மையில்லா ஏனை இடங்களில் ஏனை உருவங்களும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. நச்சினார்க்கினியருங் ‘கந்து’ என்பதற்குத் ‘தெய்வமுறையுந் தறி' என்றுரை கூறினாராகலின் ஈண்டு அது சிவலிங்கமேயாதல் தெற்றெனத் துணியப்படும். திருமுருகாற்றுப்படையிலும் நக்கீரனார் “கந்துடை நிலையினும் என்று அருளிச் செய்தமை காண்க. அற்றேல், நாகரிகம் நிரம்பிய பண்டைநாளில் மக்களுருப்போல் திருவுருவங்கள் சமைத்து வழிபடாமை என்னையெனின்; காணவுங் கருதவும் படாத முதல்வனுக்குத் தாந்தாம் நினைந்தவாறு உருவங்கள் சமைத்து வணங்கல் பொருந்தாதாகலின், அம் முதற்பொருளை ஒரு பிழம்பாகக் கொண்டு வழிபடுதற்கு ஓர் அறிகுறியாகப் பிழம்பு

கரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/221&oldid=1579469" இலிருந்து மீள்விக்கப்பட்டது