உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

வடிவான கந்துரு நிறுத்தினாரென்க.

189

பிழம்புருவின்

வழிபாடுபோல் ஏனை உருவின் வழிபாடுகள் சிறவாமை உண்மை நூல்களுட் கண்டுதெளிக.

இனி, முன்னாளில் வேளாளர் அரசராயிருந்து செங்கோல் செலுத்தினாராதலும், அவர் அரசுபுரிந்த நாடு 'ஒளி நாடு' ஆதலும் இதன்கண் விளங்குகின்றன. நச்சினார்க்கினியரும் 'ஒளியராவார் மற்றை மண்டலத்திற்கு அரசராதற்குரிய வேளாளர்' என்றுரை விரித்தார். இன்னும், முல்லை நில மக்களான இடைச் சாதியார்க்குள்ளும் பலர் அரசராயிருந்தன ரென்பதூஉம் இதன்கட் புலப்படுகின்றது. இங்ஙனம் பதிற்றுப்பத்தில் “ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமயங்க" என்று போந்த பகுதியினால் கழுவுள் என்னும் ஓர் அரசன் இடைச் சாதியானென்பது பெறப்படுகின்றது.

இவ் விருவகைச் சாதியாரோடு அருவாளநாட்டின் அரசரும் வடநாட்டிலுள்ள அரசரும் குடகுநாட்டினரசரும் தன்னிடத்துவந்து பணிந்துகிடப்பப் கரிகாற் சோழன் வீற்றிருந்தான். பாண்டிய அரசன் ஒருவனை இவன் வென்றமையும், இருங்கோவேள் என்னும் அரசனின் வழிச் சுற்றமாவாரை அழித்தமையும் இக் கரிகாலனுக்குப் பெருவென்றியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இஃதொழிய, இவ் வேந்தன் பல நாடுகளையெல்லாம் அழித்து நகரங்கள் புதுக்கிக் குளங்கள் அகழ்வித்து இளமரக்காக்கள் விளைவித்துநாகரிகம் பெருக்கினானென்பதும், இவனுக்கு முதலில் அரசிருக்கையாயிருந்தது உறையூர் ஆகுமென்பதும், பின் அதனை விடுத்துப்போனாலும் அது பாழ்படாமல் பல நற்குடிகளை ஆங்கு இருத்தி மாடங்கள் மாளிகைகள் முதலான புதுக் கட்டிடங்கள் அமைப்பித்தா னென்பதும் இப் பாட்டின்கண் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

1. Asoka's edict V, XIII

2.

3.

அடிக்குறிப்புகள்

Prof. Jacobi's introduction to jaina Sutras. Asoka's edict, VIII, XI. Debating Halls

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/222&oldid=1579470" இலிருந்து மீள்விக்கப்பட்டது