உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

11. பாவும் பாட்டின் நடையும்

தமிழ்மொழியிலுள்ள செய்யுளின் ஓசை அமைதியே பா என்று பெயர்பெறுவதாம்.ஒருவன். தொலைவிடத்திலிருந்து ஒரு பாட்டுப் பாட அப் பாட்டின் சொற்பொருள் இவை யென்று புலப்படாவாயினும், அவ்வோசை வருமாற்றை உய்த்துணர்ந்து காண்பானுக்கு அவன் பாடுஞ் செய்யுள் இன்ன பாவென்று அறியக் கிடக்கும். இங்ஙனம் நுண்ணிய விசும்பின்கண் அலைஅலையாய் எழும்பி ஓர் ஒழுங்காக வரும் ஒசையே பாவாகுமெனத் தொல்காப்பியர் செய்யுளிய லுரையிலே பேராசிரியரும் நன்கு விளக்கினார்.இவ்வாறு தோன்றிப் பரம்புஞ் செய்யுளின் ஒசை முறையைத் தமிழாசிரியர் வெண்பா அகவற்பா கலிப்பா வஞ்சிப்பா என நால்வகைப்படுத்தினார். பின்னும் இந் நால்வகைப் பாவின் ஓசை நெறியை நோக்குமிடத்து வண்பாவிற் கலிப்பாவும் அகவற்பாவில் வஞ்சிப்பாவும் அடங்குவனவாம். இஃது "ஆசிரிய நடைத்தே வஞ்சி யேனை, வெண்பா நடைத்தே கலியென மொழிப” என்றும், “பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின், ஆசிரியப்பா வெண்பா வென்றாங் காயிரு பாவினு ளடங்கு மென்ப”2 என்றும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுமாற்றான் நன்கு விளங்கும்.

இவை தம்முள் ஆசிரியப் பாவிற்குரிய ‘அகவலோசை’ என்பது ஒருவன் தான் கருதியனவெல்லாம் வரம்புபடாது சொல்லிக்கொண்ட போம்வழி இயற்கையே தொன்றுந் தொடர்பு ஒலியாகும்; வெண்பாவிற்குரிய 'செப்பலோசை' என்பது ஒருவன் கேட்பப் பிறனொருவன் அதற்கு மாறுசொல்ல நடைபெறுஞ் சொன்முறையில் இயற்கையே தோன்றி இடையிடையே நிற்றல்பெற்றுச் செல்லுவதாம். மற்றும் இவற்றில் அடங்கும் வஞ்சிப்பாவிற்குரிய ‘தூங்கலோசை' என்பது ஒவ் ஒர் அடிதொறும் தொடர்புற்று நிறைந்து செல்லும் ஏனை ஒசைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/223&oldid=1579471" இலிருந்து மீள்விக்கப்பட்டது