உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

191

போலாது ஒவ்வொரு சீர்தொறு நிறைந்து தெற்றுப்பட்டு நின்று செல்வதாகும்; கலிப்பாவிற்குரிய 'துள்ளலோசை' என்பது இசை வேறுபாடு தோற்றி ஒசைகனிந்து துள்ளித்துள்ளிச் செல்வதாம்.

இனிப் பட்டினப்பாலை என்னுமிப்பாட்டு அகவலோசை தழுவி வந்த ஆசிரியப்பாவினால் அமைக்கப் பட்டிருக்கின்றது. இச் செய்யுளின்கன் ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் தாம் உரைப்பக் கருதியனவெல்லாம் ஒரு தொடர்பாக வைத்து முந்நூற்றோரடிகாறு முரைத்தாராகலின் இப் பாவின்கண் இயற்கையாய் எழுவது ‘அகவலோசை'யே யாயிற்று. அற்றேல், “வசையில் புகழ் வயங்கு வெண்மீன், திசை திரிந்து தெற்கேகினும்’ என்பவை போன்ற வஞ்சிப்பா அடிகள் இடையிடையே கலக்கத் தூங்கலோசை மயங்கிவந்தவா றென்னையெனின்; இப்பாட்டின் முதற்றொட்டு முடிவுகாறும் அகவலோசையே வந்ததாயின் இடையிடையே ஒசை வேறுபடாமல் ஒரோசையாய் நடந்து கேட்பார்க்கு வெறுப்புத் தோற்றுவிக்குமாகலின், அங்ஙனம்

ஆகாமைப்பொருட்டு வஞ்சிக்குரிய தூங்கலோசையினை ஆங்காங்கு வேறுபடு மாற்றால் நயமுற

சைவித்துப்

பாடுவாராயினர். நாளும் பாலமிழ்தினையே உண்பானுக்கு அதன் சுவை உவர்ப்பாகத் தோன்றுமாகலின் அங்ஙனம் அஃது ஆகாமைப் பொருட்டு இடையிடையே புளிங்கறியுஞ் சுவையாற் பலதிறப்பட்ட மா பலா வாழை முதலிய பழங்களும் உண்டு, அப் பாற்சுவை இனிது நிகழுமாறு செய்வித்துக் கோடல்போல, இப் பாவின் அகவலோசையும் இன்பங் குறையாமைப் பொருட்டு ஆசிரியர் உருத்திரங் கண்ணனார் தூங்கலோசையினையும் ஆங்காங்குச் செறிவித்தும் பாடுவாராயினர்.

இனி, இவ்வகவற்பாவின் அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களாற் கட்டப்பெறுவனாம். இந் நாற்சீரடியை ஆ சிரியர் தொல்காப்பியனார் அளவடி என வழங்குவர். இனி, பாட்டின் தடை யே மயங்கிய வஞ்சிப்பாட்டின் அடிகள் ஒவ்வொன்றும் இரண்டு சீர்களாற் கட்டப்படுவனவாம். இவ்விரு சீரடியை அவர் இ குறளடி என வழங்குவர். இப் பட்டினப்பாலையின் முதலினின்று இருபத்தோரடி காறும், இருபத்தேழு முதல் இருபத்தெட்டு காறும், முப்பத்திரண்டு முதல் ஐம்பத்து மூன்றுகாறும், ஐம்பத்தொன்பது முதல் அறுபத்தாறுகாறும், எழுபத்தொன்று முதல் எழுபத்தாறுகாறும், எழுபத்தெட்டு முதல் எண்பத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/224&oldid=1579472" இலிருந்து மீள்விக்கப்பட்டது