உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

192

  • மறைமலையம் - 9

ரு

நான்கு காறும், எண்பத்தாறு முதல் தொண்ணூற்றொன்று காறும், தொண்ணூாற்று மூன்று முதல் தொண்ணூற்று நான்குகாறும், தொண்ணூற்றெட்டுமுதல் நூறுகாறும், நூற்றாறுமுதல் நூற்றெட்டுகாறும், நூற்றுப்பதினான்கு முதல் நூற்றிருபத்தேழுகாறும், நூற்றிருபத்தொன்பது முதல் நூற்று முப்பத்தேழுகாறும், நூற்றுநாற்பத்திரண்டு முதல் நூற்றைம்பத் தொன்றுகாறும், நூற்றைம்பத்தாறு முதல் நூற்றைம்பத் தெட்டுகாறும், நூற்றறுபத்துமூன்று முதல் நூற்றெழுபதுகாறும், நூற்றெழுபத்திரண்டு முதல் நூற்றெண்பத்தொன்றுகாறும், நூற்றுத்தொண்ணூற்றைந்து முதல் நூற்றுத் தொண்ணூற் றொன்பதுகாறும், இருநூற்றொன்று முதல் இரு நூற்றிரண்டு காறும், இரு நூற்றைந்து முதல் இருநூற்றெட்டு காறும், இரு ரு நூற்றுப்பதினொன்றுமுதல் இருநூற்றுப் பதின்மூன்றுகாறும், ருநூற்றெழுபத்துமூன்று முதல் இருநூற்றெழுபத்தைந்து காறும், இரு நூற்றெழுபத் தொன்பது முதல் இருநூற்றெண்பத்து நான்குகாறும், இருநூற்றெண்பத்தாறு முதல் இருநுற்றுத் தொண்ணூற் றொன்றுகாறுந் தூங்கலோசை தழீஇ வந்த வஞ்சியடிகள் வந்தன. ஏனை நூற்றுமுப்பத்தெட்டு அடிகளும் அகவலோசை தழீஇ வந்த ஆசிரியப்பாவாமென்க. எனவே, நூற்றறுபத்து மூன்றடிகள் வஞ்சிப்பாவிற்குரிய வாயினும் அவை தமக்குரிய தூங்கலோசை ஆசிரியப்பாவிற்குரிய அகவலோசையின் இடையிடையே சீர்தொறுந் தெற்றுப்பட்டுச் செல்ல வருவதே யல்லது அதனின் வேறல்லாமையால் அவ்வோசையான் நடக்கும் அவ்வஞ்சியடிகள் இவ்வாசிரியப்பாட்டின்கண் வருதற்குப் பெரிதும் இயைபுடையவாம் என்க. இங்ஙனம் அகவலோசையுந் தூங்கலோசையும் பாலுந்தேனுங் கலந்தாற்போலக் கலந்து சல்லுமாறு இப் பாட்டினை இயற்றிப் பயில்வார்க்குத் தோன்றும் ஒசையின்பம் இடையறாது செல்ல நடாத்திய ஆ சிரியர் உருத்திரங் கண்ணனார் இசையறிவு மாட்சி மிகவும் விளக்கற்பாலதொன்றாம்.

னி,வஞ்சிஅடிகள் அகவலடிகளை ஆண்டாண்டு ஒருசேரக் கூறுமிடத்தும் அவை ஒரோசையாய்ச் செல்ல வொட்டாமல் எதுகை மோனை முதலிய எழுத்தமைதி களானுஞ் சிறிது சிறிது ஓசை வேறுபடுத்துப் போகின்றார். "பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ, திருஞ்செருவி னிகன் மொய்ம்பினோர்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/225&oldid=1579473" இலிருந்து மீள்விக்கப்பட்டது