உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

.

193

என்புழிப்போலச் சிலவிடத்து இவ்விரண்டடிகள் முதற்சீர் எதுகை ஒன்றப் பொருத்து கின்றார். வேறு சிலவிடங்களில் “சோறுவாக்கிய கொழுங்கஞ்சி, யாறுபோலப் பரந்தொழுகி, யேறுபொரச் சேறாகித் தேரோடத் துகள் கெழுமி, நீறாடிய களிறுபோல, வேறுபட்ட வினையோவத்து" என்புழிப்போல இரண்டடிகளின் மேலும் முதற்சீர் எதுகைபொருந்த அமைத் திடுகின்றார். பின்னுஞ்சிலவிடத்து “வான்பொய்ப்பினுந் தான் பொய்யா,” “கொழும்பல்குடிச் செழும்பாக்கத்து,” “நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி, பணைநிலைப் புரவியினணைமுதற் பிணிக்கும்” என்றாற்போல ஓரடியினுள்ளேயே முதற்சீரும் இரண்டாஞ்சீரும், முதற்சீரும் மூன்றாஞ்சீரும் எதுகை பொருந்தப் பாடுகின்றார். ஒரோவிடத்து அகவலடியில் “வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்”, “நுண்ணிதி னுணர நாடி நண்ணார்” “பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர்" என்றாற் போல முதற்சீரும் நான்காஞ்சீரும் எதுகை பொருந்த அமைத்திடு கின்றார். மற்றும் ஒரோவிடத்து "மாத்தானை மறமொய்ம்பிற், செங்கண்ணாற் செயிர்த்து நோக்கி” என்புழிப்போல எதுகையின்றி முதற்சீர் இரண்டாஞ்சீர் மோனை ஒன்றவும், “MCHEமுழவின் வேந்தர் சூடிய" என்புழிப்போல முதற்சீரும் மூன்றாஞ்சீரும் மோனை ஒன்றவும் இயைத்திடுகின்றார்.

இனி ஆசிரியர் தம்மாற் பாடப்படும் பொருள்வழியே தம் அறிவை வைத்து மொழிந்து போகுங்கால் இடர்ப்படாது தோன்றும் எதுகை மோனைகளையே அமைத்திடுகின்றார். பொருளுரைக்கேற்ற எதுகை மோனை எளிதிற் றோன்றா விடத்து எதுகைபோல ஓசை பொருந்துஞ் சொற்களைப் பதித்திடுகின்றார்; இதற்குக் “கார்க்கரும்பின் கமழாலைத் தீத்தெறுவிற் கவின்வாடி”, “இனமாவி னிணர்ப் பெண்ணை, முதற்சேம்பின் முளையிஞ்சி”, “முனைகெடச் சென்று முன்சம முருக்கித், தலைதவச் சென்று தண்பணையெடுப்பி” என்றற் றொடக்கத்து அடிகள் எடுத்துக் காட்டாம்; இவற்றுள், கார்க் கரும்பு; தீத்தெறுவு, இனமாவின்; முதற்சேம்பின், முனைகெட: தலைதவ என்பன உண்மை எதுகை யல்லாவிடினும் அதுபோல் ஒசை ஒன்றியிருத்தல் காண்க. இன்னும் ஒரோவிடத்து இவ்வோசைப் பொருத்தமுடைய சொற்கடானும் எடுத்த பொருளுக்கு அடுத்துநில்லாவிடின் எதுகைமோனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/226&oldid=1579474" இலிருந்து மீள்விக்கப்பட்டது