உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

194

மறைமலையம் – 9

சிறிதுமின்றியுஞ்சொற்களை யமைத்துச் செல்கின்றார்; இஃது, உணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து, வளைவாய்க் கூகை நண்பகற் குழறவும்” “தேர்பூண்டமாஅ போல, வைகறோறு மசைவின்றி, உலகுசெயக் குறைபடாது” என்பவற்றிற் காணப்படும். இங்ஙனம் பொருளுக்கு இசையச் சொற் பொருத்தும் முறை இவ்வாசிரியரோடொரு காலத்தினரும் இவர்க்கு முன்னோருமான பண்டைச் செந்தமிழ்த் தண்டா நல்லிசைப் புலவர் தமக்கெல்லாம் பொதுவிலக்கணமாம். பிற்றை ஞான்றைத் தமிழ்ப்போலிப் புலவரோ பொருட்சிறப்புச் சிறிதுமின்றி வெறுஞ் சொல்லாரவார அமைப்பிலேயே தம் அறிவைக் கழித்துத் தெளிதமிழுக்குந் தமக்கும் இழுக்கந் தேடுவாராயினர்; அங்ஙனம் அவர்செய்தல் உயிரகத் தில்லாப் பிணவுடம்பைப் பலவகையால் ஒப்பித்துக் கண்டு மகிழ்தலோ டாக்குமாகலின், அவர் இசையாப்புலமை அறிவுடையார்க் கெல்லா வசையாய்த் துயரந்தரும் நீர்மைத் தாமென்றொழிக.

L

ப்

இனி, இப் பாட்டின் நடையழகு மிகவும் போற்றற்பால தொன்றாம். இனிய தெளிதமிழ்ச்சுவை யூறிய முழுமுழுச் சொற்களால் இப் பாட்டு முற்றும் அமைந்திருக்கின்றது. அவற்றின்கட்டொடர்புபட்டு எழூஉம் இன்னோசை குழல் யாழ் முதலிய கருவிகளினின்று போதரும் ஒலிபோல் மிகவுந்தி குதியாநின்றது. இவற்றைப் பயிலுங்காலத்து நம் அறிவு அம் மெல்லோசை வழிச்சென்று உருகி மிகவுந் தூயதான மேலுலகத்தில் உயரப்போகின்றது. நீர் மடையிலே தெள்ளத்தெளிந்த அருவிநீர் திரண்டு ஒழுகுதல்போல் இச் செய்யுளோசையும் மெல்லென்று மொழுமொழுவெனச் செல்கின்றது. “மதி நிறைந்த மலிபண்டம், பொதிமூடைப் போரேறி”, “மயிலியன் மானோக்கிற், கிளிமழலை மென்சாயலோர், வளிநுழையும் வாய் பொருந்தி,” “குழலகவ யாழ்முரல, முழவதிர முரசியம்ப, விழவறா வியலாவணத்து "மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக், கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக், கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச், செறுவும் வாவியு மயங்கி நீரற், றறுகோட்டிரலையொடு மான்பிணை யுகளவுங், கொண்டி மகளிருண்டுறை மூழ்கி, யந்தி மாட்டிய நந்தா விளக்கின், மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ, வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியில்” என்றற் றொடக்கத்துச் சில அடிகளை நோக்கினும் இச் செய்யுளின் மெல்லென்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/227&oldid=1579475" இலிருந்து மீள்விக்கப்பட்டது