உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

195

ஓசையினிமை நன்குவிளங்கும். மாம்பழச்சாறு பெய்த குடுவையின் எப்பக்கத்தே பொத்திட்டு நாவைநீட்டினும் அதன்வழியே யொழுகும் அச் சாறு தித்தித்தல்போல, இவ்வரிய செய்யுளின் எவ்விடத்தே அறிவு தோயினும் ஆண்டு இனிமையே விளையாநிற்கின்றது. ஆதலால், எடுத்துக் காட்டிய இவ்வடிகள் மட்டுமே சுவைகனிந் திருப்பன வென்று நினைதல் இழுக்காமென்க.

L

இதன்கண்ணுள்ள ஒவ்வொரு சொல்லும் பொருட்கரு நிரம்பிக் கொழுந்தீயிற்றெறித்த பொறிபோல் நம்மறிவைக் காளுத்திப் பலபொருட் டோற்றங் காட்டி விளங்குகின்றன. பயன்படாது நிற்குஞ் சொல் ஒன்றாயினும் இதன்கட் காணப் படுவதில்லை. விலைவரம்பறியாப் பட்டாடையின் கண் ஒவ்வோர் இழையும் பிணைந்துநின்று அவ்வாடையினை ஆக்குதல்போல, இதன்கண் ஒவ்வொரு சொல்லும் ஒன்றையொன்று கௌவிக் கொண்டு இச்செய்யுளை ஆக்குகின்றது. பெயர்வினைச் சொற்களை அடுத்துநிற்கும் அடைமொழித் தொடர்களெல்லாம் உடம்பொடுகூடிய உறுப்புப்போல் இசைவு பெற்றிருக்கின்றன. இன்னும் இப்பாட்டின் சொன்னயம் பொருணயங்கள் விரிப்பிற் பெருகும்.

இனி, இப்பாட்டின்கட் சிறிதேறக்குறைய ஆயிரத்து முந்நூற்றுபத்தொன்பது (1319) சொற்களிருக்கின்றன. இவற்றுட் பதினொருசொற்கள் (11) வடசொற்களாம்: அவை மகம், அங்கி, ஆவுதி, பூதம், மது, பலி, பதாகை, அமரர், கங்கை, புண்ணியம், சமம் என்பனவாம், ‘ஞமலி' என்னும் ஒரு சொல் பூழி ரு நாட்டிற்குரிய திகைச்சொல்லாகும். ஆகவே இப் பாட்டில் நூற்றுக்கு ஒன்று விழுக்காடு (1%) பிறநாட்டுச் சொற்கள் கலந்தன வென்பது அறியற்பாற்று. இதனால் இவ்வாசிரியர் காலத்திற் றமிழ் மிகவும் தூயதாக வழங்கப்பட்டு வந்ததென்பது புலப்படும் என்க.

அடிக்குறிப்புகள்

1. தொல்காப்பியம், செய்யுளியல் 108 2. தொல்காப்பியம், செய்யுளியல் 107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/228&oldid=1579477" இலிருந்து மீள்விக்கப்பட்டது