உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

12. விளக்க உரைக்குறிப்புகள்

சில

ப் பட்டினப்பாலையின் உரைக்குறிப்புகள் ஈண்டெழுதுதற்குமுன், இதன் பொருள்கோள் முறையினைச் சிறிது விளக்குதல் இன்றியமையாது வேண்டப்படுவதாகலின் அதனை இங்கு ஒருசிறிது தெளித்துரைக்கின்றாம்.

மாட்டு : பத்துப்பாட்டுக்களில் ஒன்றாகிய இப்பட்டினப் பாலையும் இதனொடு சேர்ந்த ஏனை ஒன்பது பாட்டுக்களும் பொருட்டொடர்புற்று மிகநீண்டு அமைந்தனவாயிருக்கின்றன. ஒரு சங்கிலியிற் பலகண்கள் இருத்தல்போல் இப் பாட்டுக் களிடத்தும் அகன்று நின்று பொருள் பொருந்துகின்ற இடங்கள் பல உளவாம். ஒருபொருள் ஓரிடத்துச் சென்று ஒருவாற்றான் முடிந்தும் முடியாமலும் முடியாமலும் நிற்பப், பிறிதொரு பொருள் அவ்விடத்தினின்றுந்தோன்றி நடந்துபோய்ப் பிறிதோரிடத்து முடிந்தும் முடியாமலும் நிற்ப, இங்ஙனமே இடையில் வருவனவெல்லாம் அமைய, கடைசிப் படியாக அப்பாட்டின் பொருள் முற்றுப் பெறுவதாகும். இவ்வாறு இடையிடையே முடிந்தும் முடியாமலும் நிற்கும் பொருள்கள் கடைசியாக அப் பாட்டின் கட் கருக்கொண்ட முதற்பொருளைச் சார்ந்து முடியுமாகலின் சார்பு பொருள்கள் என்று பெயர்பெறுவன வாகும். இச் சார்பு பொருள்களோடு கூடிச் சிறந்துவிளங்கும் பொருள் முதற்பொருள் எனப்படும்.

முடியணி வேந்தனொருவன் அருமணி குயிற்றிய செங்கோல் கைப்பற்றி அரியணை வீற்றிருப்ப, அவனைச் சார்ந்துநின்று அவன் றன் அரசியற் சுற்றமெல்லாம் விளங்கினாற்போல, ஒரு பாட்டின்கட் கருக்கொண்ட முதற்பொருள் அதற்கு ஓருயிராய்ச் சிறந்து நிற்ப ஏனைச் சார்புபொருள்களெல்லாம் அதனைச் சூழ்ந்துகொண்டு அதனைச் சிறப்பித்து அவ்வாற்றால் தாமும் விளங்காநிற்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/229&oldid=1579478" இலிருந்து மீள்விக்கப்பட்டது