உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

197

சில்லொளி வீசும் வான்மீன்கள் சூழ இருந்தாலல்லது பல்லொளிவீசும் பான்மதிவிளக்கம் சிறவாதாகலின், சார்பு பொருட் சேர்க்கையின்றி முதற்பொருள் சிறப்புடைத்தாய்ச் செல்லாதென்க. எனவே, ஒரு பாட்டின் முதற்பொருளைச் சிறப்பித்துக் கொண்டு அமைந்து கிடக்குஞ் சார்புபொருள்கள் இன்னோரன்ன பெரும்பாட்டுகளில் அகன்று நிற்குமாகலின், உரை கூறலுறும் ஆசிரியன் அவை தம்மையெல்லாம் அணுகிய நிலையில் வைத்துப் பொருளுரைக்கும் நெறியினையே தொல்லாசிரியர் மாட்டு என வழங்கினார், ஆங்கிலத்திலும் மிலிட்டன் என்னும் நல்லிசைப் புலவர் துறக்க இழப்பு என்னும் தமது அரும்பெருங்காப்பியத்திற் பாட்டுகளை அகன்று பொருள்கிடப்பவைத் தெழுதினார். அதற்குரை கண்டாரும் பிறரும்' அந் நுணுக்கமறிந்து அவைதம்மையெல்லாம் அணுகிய நிலையில் வைத்து உரையுரைத்தார். இங்ஙனமே இன்னோரன்ன பாட்டுகளுக்கு உரை உரைக்கவேண்டுமென்பது ஆசிரியர் தொல்காப்பியனார் “அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும், இயன்று பொருண்முடியத் தந்தனருணர்த்தல், மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின் ஆணைதந்தருளிய வாற்றானும், அதற்குரைகண்ட பேராசிரியர் உரைத்த உரை விளக்கத்தானும் தெற்றெனத் துணியப்படும்.

என்று

சொல்லையும்

இனி,‘மாட்டு' என்னும்பொருள் கோள்முறை இதுவேயாதல் அறியமாட்டாத நச்சினார்க்கினியர், இப்பத்துப்பாட்டுகட்கும் ஒருமுறையுமின்றி ஓரிடத்து நின்ற ஒரு பிறிதோரிடத்து நின்ற பிறிதொரு சொல்லையும் எடுத்து இணைத்து உரை உரைக்கின்றார். அங்ஙனமுறைகூறுதல் நூலாசிரியன் கருத்துக்கு முற்றும் முரணாதலானும், இவர்க்கு முன்னிருந்த நக்கீரனாரை யுள்ளிட்ட தொல்லாசிரியரெவரும் இவ்வாறு உரை உரைப்பக் காணாமையானும் நச்சினார்க்கினியர் உரைமுறை கொள்ளற்பாலதன்றென மறுக்க.

நச்சினார்க்கினியருரை கூறாவிடின் இப் பத்துப் பாட்டுக்களின் பொருள் விளங்குத லரிதேயாதல் பற்றியும், இவர் தொல்காப்பியம், கலித்தொகை முதலிய பண்டைச் செந்தமிழ் நூல்கட்கு அரியபெரிய தண்டமிழுரை வகுத்தது பற்றியும் இவரை நெஞ்சாரவழுத்தி இவர்க்குத் தொண்டு பூண்டொழுகுங் கடப்பாடுமிகவுடையே மாயினும், இவர் வழுவியவிடங்களிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/230&oldid=1579479" இலிருந்து மீள்விக்கப்பட்டது