உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

மறைமலையம் - 9

இவரைப்பின்பற்றி உலகை ஏமாற்றுதல் நடுவுநிலையாகாதாகலின் இவர் தம் வழூஉக்களைக் களைந்து திருத்திப் பின் இவரைச் செந்தமிழ்மாமுகில் வள்ளலாய்க் கொண்டு வழிபடுவாமென்க.

இனி, இப் பாட்டினப்பாலையின்கட் போந்த பொருள் இசைவுபெறுகின்ற பொருத்துவாய்கள் இருபத்தேழு உள்ளன.

அவை

வ தம்மையெல்லாம் இறுதியில் வினைமுடித்துத்

தொகுத்துக் காட்டுமிடத்துக் காண்க. இதன்கட் கருக்கொண்ட முதற்பொருள், 299 வது வரிமுதலாக முடிந்த “திருமாவளவன் தெவ்வர்க்கோக்கிய, வேலினும் வெய்ய கானமவன், கோலினுந் தண்ணிய தடமென்றோளே" என்பது 218 முதல் 220 ஆவது வரிகாறுமுள்ள "முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும், வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய, வாரேன் வாழிய நெஞ்சே’ என்பதனொடு பொருந்திநின்று முடிவதாகும். ஏனைய வெல்லாம் சார்புபொருள்களாய் இம் முதற்பொருளை அணிந்துரைத்தற்

பொருட்டு வந்தனவென்க.

உரை

குறிப்பு : இங்கே குறியாது விடப்பட்டவற்றிற் கெல்லாம் பொருட்பாகுபாட்டிலும், பின்னேயுள்ள

அருஞ்சொற்பொருள் வரிசையிலுங் காண்க.

(1-8) வரிசையில்......... வியன் கழனி ...

“வசையில் புகழ்” என்பது வெள்ளிக்கு அடை; சேய்த்தாய் நிற்குங் காவிரிக்கு அடையாகாது. மழை யுண்மையின்மைகளை அறிவித்தலிற் குற்றமில்லாத புகழினை யுடையதாயிற்று. தற்பாடிபுள் - வானம்பாடிப் பறவை; தன் - மழை. இப் பறவை L மழைத்துளியை உண்டு உயிர் வாழ்வதாகலின் இது மழைவருகையை நோக்கிப் பாடுமென்றார். தளி - நீர்த்துளி. தேம்ப

- வாட.

(9-19) கார்க்கரும்பின்

முனையிஞ்சி

-

கார்க்கரும்பு பச்சைக்கரும்பு. ஆலை -

பாகுகாய்ச்சுங் கொட்டில். தெறுவு - சுடுதல். கவின் - அழகு. செறுவயல். மோடு - பருத்தவயிறு. கூடு - நெல் வைக்குங்கூடு, இணர்ப்பெண்ணை - குலைகளையுடைய பனை : அன்றிப் பூங்கொத்துகளையுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/231&oldid=1579480" இலிருந்து மீள்விக்கப்பட்டது