உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

199

கூந்தற்பனை எனினுமாம். முதற் சேம்பு அடியிலே கிழங்குள்ள சேம்பு என்னுஞ்செடி.

(20-27) யாகனகர் ... .. செழும்பாக்கத்து

-

-

அகல்நகர் - அகன்றவீடு. வியல் - அகலம். ‘மடம்' என்பது பிறரறிவித்தவற்றை உட்கொண்டு அவற்றைப் பிறர் தெரியக் காட்டாது அகத்தே வைக்கும் மகளிர்க்குரிய ஓர் இயற்கைக் குணம். இதனை ஆசிரியர் நக்கீரனார் ‘கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை' என்பர். ஈண்டு ‘மடம்’ கள்ளம் அறியாமை என்னும் பொருட்டு, என்னை? ஈண்டுக் கூறப்பட்டார் சிறுமியரேயாகலின், கொடுங்காற் கனங்குழை வளைந்த சுற்றுள்ளதாகச் செய்யப்பட்ட கனத்த குண்டலம். பொன் பொன்னாற் செய்த அணிகலம். 'இன்று' என்பது இன்றி எனப் பொருள்பட்டது. முன் வழிவிலக்கும் விலங்குபகையல்லது கலங்குபகையறியாக் கொழும்பல்குடி - புதல்வர் விளையாடுங் காலத்து அவர் உருட்டுஞ் சிறு தேரினைச் சிறு மகளிர் எறிந்த குண்டலந் தடுக்கி நிற்கச் செய்யும் இதுபோன்ற சிறுதடை களான பகை நேர்வதல்லது வேறு தம் மனங் கலங்குதற்குக் காரணமான பகையில்லாத செல்வ நிறைந்த பலகுடிகள் என்க; பாட்டுச் சென்றவாறே எளிதிலே பொருள்கொள்ளக் கிடக்கும் இவ்வடிகட்கு இப் பொருள் காணமாட்டாத நச்சினார்க்கினியர் இவற்றை ஓர் இயைபு மின்றிக் ‘கையினுங் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்' பெருஞ் சினத்தாற் புறக்கொடாஅ, திருஞ்செறுவின்' என்னும் எழுபது எழுபத் திரண்டு எழுபத்துமூன்றாம் அடி களொடு சேர்த்துப் பொருளுரைத்துப் பின்பவற்றைக் கொண்டு வந்து ‘கொழும் பல்குடிச் செழும்பாக்கம்' என்பதனொடு கூட்டி முடித்திடர்ப்படுகின்றார்; இங்ஙனம் பொருளுரைத்தல் பாட்டின் வரன்முறை சிதைத்தலாமன்றிப் பிறிதென்னை? இங்கே ‘பாக்கம்’ என்றது காவிரியாற்றின் கரையிலுள்ள ஊர்.

-

முதுமரத்த முரண்களரி' என்னும் 59 ஆம் அடிமுதற் கொண்டு, 74- ஆவது வரி வரையில் கடற்கரையிலுள்ள செம்படவர் குப்ப இயற்கை சொல்லப்படுகின்றது. இவ்வாறாகப், பாக்கத்திற் சொல்லப்பட்டதனைக் குப்பத்திற்கும் குப்பத்தில் நடைபெறுதலைப் பாக்கத்திற்கும் ஏற்றி அவர் பொருளுரைத்தது போலியுரையா மென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/232&oldid=1579481" இலிருந்து மீள்விக்கப்பட்டது