உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மறைமலையம் – 9

(28-39) குறும்பல்லூர்... திணையேரி

கொள்ளை

விலை. சாற்றி - சொல்லி விற்று. பணை

குதிரை இலாயம். புறவு

-

புறம்பு. 'உரு கெழுதிறலுயர்

கோட்டத்து' என்பதற்கு நச்சினார்க்கினியருரைத்த பல பொருளுங் காண்க. 'கோட்டம்' கரையுமாம். கோயிலுமாம்.

(40-50) புலிபொறிப்... மாசூட்டும்

போர்க்கதவு - வாய்பொருந்தின கதவுகள்; “போரமை புணர்ப்பின்” என்றார் நெடுநல்வாடையிலும். ஓவம் - சித்திரம்; “ஓவத் தன்ன இடனுடை வரைப்பின்” என்றார் புறத்தினும்.

(51-53) தண்கேணித்..... பல்சாலை

கேணித் தகைமுற்றம் - கேணிகளை உள் அடக்கின முற்றம்; தகைதல் - உள்ளடக்குதல். சாலை - மாட்டுக் கொட்டில்.

(53-58) தவப்பள்ளித்.... சேக்கு

'முனிவர் வேட்கும் புகையை வெறுத்தலாற் குயில்கள் சோலையைவிட்டுக் காளிகோட்டத்திற்போய்த் தூதுணம் புறாக்களோடும் ஒருபுறத்தே தங்கும்' என நேரே பொருள் படுதலை விடுத்து நச்சினார்க்கினியர் காளிகோட்டத்தைப் புறாக்களுக்கு அடைமொழியாக்கிப் பின் அப் புறாக்களோடுங் குயில்கள் காவிலே சென்றிருக்குமெனக் காவுடனே சேர்த்துப் பொருளுரைக்கின்றார். அங்ஙனம் பொருளுரைப்பின் முனிவர் வேள்வி வேட்குமிடம் இதுவென்பது பெறப்படாமையானும், குயில்கள் எவ்விடத்தைவிட்டு எங்கே போயிருந்தனவென்று வினாவுவார்க்கு இறுக்கலாகாமையானும் அஃதுரை யன்றென மறுக்க. இளமரக்காவிலே முனிவர் வேட்கின்றாரென்றும், அங்கெழும் புகையை வெறுத்து அச் சோலையை நீங்கிப்போய்க் குயில்கள் காளிகோட்டத்திற் றங்குகின்றன வென்றும் பொருள் கூறுதலே பொருத்த முடைத்தாதல் காண்க. காளிகோட்டம் நகர்ப்புறத்தே உள்ளது; முனிவர் வைகுங் கா அதற்குஞ் சேய்த்தாய் உள்ளதென்க. ‘அக்நி,’ ‘ஆகுதி’ என்னும் வடசொற்கள் ‘அங்கி’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/233&oldid=1579482" இலிருந்து மீள்விக்கப்பட்டது