உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

201

‘ஆவுதி' எனத் திரிந்தன. கடிநகர் - அச்சந்தருங் காளிகோட்டம். தூது - சிறுகல்.

(59-74) முதுமரத்த.....புகர்ப்போந்தை

கொலைத்தொழில்.

கொலைத்

கருந்தொழில் தொழிலிலும், இரும்பு முதலான வலிய உலோகங்கள் அடித்துத் திரட்டுந் தொழிலினும் பழகிய கையைக் ‘கருங்கை' என்பர்; 'கொன்று வாழ் தொழிலினும் வன்பணித் தொழிலினுங், கன்றிய தொழிற்கை கருங்கை எனப் படுமே' (திவாகரம், 16) என்பதூஉங்

என்பதனொடு சேர்த்துத் திரும்பவும் 70 இல் உள்ள 'தீண்டி' முதலிய வினைகளொடு சேர்த்துப்,பிறகு அதனை 27 இல் உள்ள பாக்கத்தோடு இயைத்துப் பெரிய தோர் இடர்விளைத்துப் பாட்டின் பொருணயஞ் சிதைத்தார். இவர்போல் இங்ஙனம் உரைக்குழப்பஞ் செய்வார் பிறரை வேறு யாண்டுங் கண்டிலம். சிறார் விளையாட்டையும், வலிய பெருமக்கள் போர்

விளையாட்டையுந் தனித்தனியே கூற வேண்டுமெனக் கருதிய தங்கருத்தை, அக் கருத்துக்குச் சிறிதும் இடந்தராத ஆக்கியோன் திருப்பாட்டில் இயைப்பான்வேண்டி அதனை அங்ஙனமெல்லாம் அலைத்து வரம்பின்றி யுரைகூறத் துணிந்தது அவர்க்குப் பெரிதும் ஏதமாம் என்க.

இனிக் 'கருந்தொழின் மாக்கள்' என்பதற்கு மீன்பிடிக்குங் கொலைத் தொழிலிற் பழகிய வலிய செம்படவர் என வைத்து நேரே பொருளுரைத்துச் சென்றால் இப் பகுதி ஆற்றொழுக்காய்ப் பொருள் பயந்து செவ்விதின் முடியுமாற்றைப் பொருட் பாகுபாட்டில் வரைந்த பொழிப்புரைக்கட் காண்க. ‘கலிமாக்கள்’ என்பதற்குச் சிறார் என்று பொருளுரைத்தற்குப் பாட்டின் பொருளியைபு இடந்தராமையோடு அச்சொற்றொடரும் டந்தருவதின் றாம்; என்னை? சிறு மகார்க்குக் கருந்தொழில், வலிய, செருக்கிய முதலான அடைமொழிகள் ஏலாமையானும், மாக்கள் என்னுஞ்சொல் அப்பொருடராமையானு மென்பது. மற்றுக் கிடந்தவாறே வைத்துக் 'கலிமாக்கள்' செம்படவர் எனப்பொருளுரைப்பின், ‘இகன்மொய்ம்பினோர்' என்பதும் அவரையே குறித்துநின்று கூறியது கூறலாமெனின்; அற்றன்று, சம்படவர் மேற்சொன்னவாறு கையினுங் கலத்தினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/234&oldid=1579483" இலிருந்து மீள்விக்கப்பட்டது