உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

மறைமலையம் – 9

மெய்யுறத் தீண்டிப் போர் இயற்றியும் அதனானும் தம் வலி யடங்காமையின் ‘மாறுபட்ட திறலுடையராய்க்’ கவண்கல் வீசுவாராயினரென்று உரை கூறக் கிடத்தலால் அது கூறியது கூற லாகாதென்க.

6

வறள் அடம்பு

வறண்டமணலிற் படர்ந்த அடப்பங் கொடி ; இக்கொடி கடற்கரை மணலிற் படருமென்பது நெய்தற்கலி (10) யுள்ளும், பதிற்றுப் பத்தினுள்ளுங் (30,51) கூறப்படுதலின் இது ‘வறள்’ என்னும் அடையடுத்துவந்தது.நாள் மீன் - நட்சத்திரம்; கோள்மீன் - கிரகம்.

(75-77) பறழ்ப்பன்றிப்.... விளையாட

‘உறை’ என்பது மண்ணாற் சுவர்போற் சூழ வனைந்து

ஓரடிக்குமேல் உயரமாக்கிச் சுள்ளையில் வைத்துச் சுட்டெடுப்பது. இவ்வாறு சமைத்த உறைகளை நிலைத்தை அகழ்ந்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிச்செய்வது 'உறைக்கிணறு' என்று சொல்லப்படும். மேழகத்தகர் துருவாட்டின் ஆண்; இதனை ‘ஏழகம்' என்றும் வழங்குப; இவ்விரு சொல்லுந் துருவாட்டின் ஏற்றுக்குப் பெயராதல் ரு திவாகரத்துங் காண்க. சிவல் - கௌதாரிப்பறவை. புறச் சேரி - இழி தொழிலாளரான செம்படவர் நகர்க்குப் புறத்தேயிருக்கும் ஊர்; இது குப்பத்தை அடுத்துள்ளதாகும்.

(78 - 105) கிடுகுநிரைத்......பெருந்துறை

-

-

கிடுகுநிரைத்து எஃகு ஊன்றி கேடகத்தை வரிசை யாவைத்து வேலை ஊன்றி என்க. நடுகல்லின் அரண் நட்டகல்லையே இடமாய்க்கொண்டு நின்றவீரன் என்க. இவ்வாறன்றி, இறுந்துபட்ட மறவனுக்கு அறிகுறியாக அல்லது நினைவுக்குறியாக நிறுத்திய கல்லையுடைய காவலிடம் அல்லது கோட்டம் என்று பொருளுரைத்தலே விழுமிது. நடுகல் நின்ற இவ்வரணத்தைத் தூண்டிற்கோல் சார்த்திய செம்படவர் குடிசைவீட்டுக்கு ஆசிரியர் உருத்திரங் கண்ணனார் வெளிப் படையாக உவமை கூறுதலையும் அறியாது, நச்சினார்க்கினியர் இவ்வடிகளைப் பிரித்தெடுத்துக் கொண்டு போய் 71 - வது அடியிலுள்ள 'புறக்கொடாஅது' என்பதனோடு இயைத்து ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/235&oldid=1579484" இலிருந்து மீள்விக்கப்பட்டது