உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

203

ஒரியை

போலியுரை கூறினார். அங்ஙனங் கூறுதற்கு பின்மையானும், ஆசிரியர் கருத்துக்கு மாறாய் உவமமின்றிப் பிறழ்தலானும் அவருரை பொருந்தாதென மறுக்க.

நெடுத்தூண்டிலிற்காழ்' என்றமையான் அதனோடு இனமான மீன்இடும் புட்டிலும் ஈண்டுக் கொள்ளப்படும். கேடகம் மீனிடும் புட்டிலுக்கும், வேல் தூண்டிற்கோலுக்கும்

உவமைகளாம்.

-

சினைச்சுறவின் கோடுநட்டு மனைச்சேர்த்திய வல்லணங் கினால் - கருக்கொண்ட சுறாமீன் கொம்பை நட்டு அதனையே தான் இருக்குமிடமாகச் சேர்த்த வலிய கடற் றெய்வத்தின் பொருட்டு. மனை இருக்குமிடம்; இச்சொல் இப்பொருள் படுமாகவும், நச்சினார்க்கினியர் இதனைக் கான்லே வேறுபிரித்துப் போய் 83 - வது வரியிலுள்ள ‘மணன்முன்றில்' என்பதனொடு கூட்டினார். 'நெய்தனிலத்தில் நுளையர்க்கு வலைவளந் தப்பின் அம் மகளிர் கிளையுடன் குழீஇச் சுறவுக்கோடு நாட்டிப் பரவுக்கடன் கொடுத்தலின் ஆண்டு வருணன் வெளிப்படும்' என்பது தொல்காப்பியப் பொருளதி காரத்தில் நச்சினார்க்கினிய ருரைத்தவுரை.

மடிதல் - தந்தொழில் செய்யாது சோம்புதல். காவிரித் துறைக்கு உவமையாய் நேரே சென்றியைவதாகிய ‘பெறற் கருந் தொல்சீர்த் துறக்கம்' என்னும் அடியை 111 - வது அடியிலுள்ள நடுங்கால்மாடம்' என்பதனோடு யைத்து இடர்ப்படு கின்றார் நச்சினார்க்கினியர். கவலையின்றிப் பல பயன் நுகர்ந்து பரதவர் தம் மகளிரோடும் இனிது விளையாட்டயர்கின்ற காவிரித் துறையைத், தேவர் அரம்பை மாதரோடும் விளையாடு கின்ற துறக்கத்திற்கு உவமை கூறுதலே நிரம்பவும் பொருத்த முடைமையின், அதுவே ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் கருத்தாதல் காண்க.

(106-115) துணைப்புணர்ந்த.......கங்குலான்

-

துணை கணவன். மது - காமத்தேன். கொடுந்திமில் முன்வளைந்த கட்டுமரம், அல்லது மீன்படகு, தோணி எனவும் ஆம்.குரூஉச்சுடர் நிறஞ்சிறந்த விளக்கு. கண்அடையஇய - கண் அடைந்த, அஃதாவது கண்டுயின்ற.

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/236&oldid=1579485" இலிருந்து மீள்விக்கப்பட்டது