உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

மறைமலையம் - 9

(116 - 125) மாஅகாவிரி......குறையடாது

-

எக்கர் காவிரியாற்றுநீர் கொண்டுவந்த திரட்டிய டுமணல். இவ் வெக்கர்மணலிலே கடையாமத்தில் துயில் கொண்டு கிடப்பார் சுங்கங் கொள்ளுங் காவலாளர் என்பது நேரே பொருள்படுவதாகவும், இதனைவிட்டு நச்சினார்க்கினியர் அதனைப் பரதவர்மேலேற்றி அவர் அம்மணன் மேற் கண்டுயின்று கிடப்பரென வுரைகூறி, மற்றை நாளில் அப் பரதவர் 'வெறியாடு மகளிரொடு' கூடி விழாவெடுப்பரென 155 - வது வரியொடு காண்டு போய்க் கூட்டி முடித்திடுகின்றார். இப் பாட்டுச் சல்லுநெறியை ஒரு சிறிது நோக்குவார்க்கும் இவருரை பொருந்தாமை நன்கு தெளிப்படும். சுங்கங்கொள்வோர் தங்கடமை வழாது இரவிலுஞ் சாவடியிலிருந்தவாறே காவலாய் எக்கர்மணலிற் றுயில் கொள்வரெனக் கிடந்தவாறு

வைத்துரைத்தலே பொருட் சிறப்புடைத் தாவதன்றிப், பரதவர் உறங்கினாரென வாளாது கூறுல் சிறவாதென்க.

வேலாழி - கடல், ஈண்டு ஆகுபெயராய் கடற்கரை. இனி வேலா ஆழி எனப் பிரித்துக் கரையுங் கடலுமென உரைத்தலு

மொன்று; இவ்வாறு கொள்ளின் 'தாழை வேலாழி

வியன்றெருவில்' என்பதற்குத் ‘தாழைவளர்ந்த கரையினையும் கடலருகே நின்ற அகன்ற தெருவினையுமுடைய' என்று பொருளுரைக்க; வேலா ஆழி என்பவற்றில் ஆழி என்பதன் முதல் தொக, வேலாழி என்று அவை புணர்ந்தன. உல்கு சுங்கம்; 'உறுபொருளும் உல்கு பொருளும்" (குறள். 756) என்னுந் திருக்குறளிலும் இஃது இப்பொருட்டாதல் காண்க.

66

(125 - 141) வான்முகந்த ....முன்றில்

“நிலத்து ஏற்றவும்" என்பதூஉம் பாடம்; அதற்கு ‘நிலத்தின் கண் ஏற்றப்படவும்' என்று பொருளுரைக்க. ‘பரப்பவும்' என்பது தன் வினைப் பொருட்டு, வலியுடை வல் அணங்கினோன் - உடல்வலியொடு மனவலிமையும் ஒருங்கு உடைமையாற் பிறர்க்கு அச்சத்தை விளைக்குங் காவலன் எனப், புலியடையாள இலச்சினையைப் பொறிக்குந் தொழிலாளன் மேற்றாக உரைக்க; மனவலியாவது தான் ஏன்றுக் கொண்ட கடமையிற் பிறழாத மனத்திட்பம். சுங்கங்கொடாமற் பண்டங்களைக் களவில் ஏற்றவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/237&oldid=1579486" இலிருந்து மீள்விக்கப்பட்டது