உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

205

இறக்கவுங் கருதுவார்க்கு அவன் அச்சத்தை விளைத்தலின் அணங்கினோன்’ என்றார். இனி, அணங்கின் நோன்’ எனப்பிரித்து அவற்றைப் புலிக்கு அடையாக்கி,வலியுடைமையால் வலிதே வருத்தும் இயல்பினதான வலிய புலியினடையாளம் எனப் பொருளுரைத்தல் சிறந்ததன்று.'புலி' உவமவாகுபெயர்.பண்டம் பொதிமூடை - பண்டங்கள் பொதிந்த மூட்டை. ‘கொடு வளைவுப் பொருளுணர்த்தும் ஓர் உரிச்சொல். வருடை ருவகைமான். ஏழகம், மேழகம் என்பன ஆட்டுக்கிடாய் என்னும் ஒரு பொருளையே உணர்த்துவனவாகும்.

(142 - 158) குறுந்தொடை -லாவணத்து

-

குறுந்தொடை - அணுகினபடிகள். 'குறுமை’ ஈண்டு அணிமையினை யுணர்த்திற்று. படிக்கால் - ஏணி, பல்தகைப்பு- வீட்டின் பலபகுதிகள்; கட்டுகள். வளி நுழையும் வாய் தென்றற்காற்றுப் புகும் சாளரம். நுண்தாது உறைக்கும் நுண்ணிய மகரந்தப் பொடியைச் சொரியும்; “புன்னை நுண்டா துறைத்தரு நெய்தல்” என்னும் ஐங்குறுநூற்றிற்போல. துடுப்பு - கணு. ஆவணம் கடைத்தெரு.

-

(159 - 183) மையறுசிறப்பிற்.....வரைப்பில்

-

மையறு சிறப்பிற் றெய்வஞ் சேர்த்திய மலர் அணிவாயிற் பலர்தொழு கொடி குற்றமற்ற சிறப்பினையுடைய தெய்வத்தை ஏற்றுவித்து மலர்களணிந்த கோயில் வாயிலிலே பலருந் தொழுதுசெல்லுங் கோழிக்கொடி என்க. நின்றவாறே சென்று இயைந்து இங்ஙனம் பொருடருவ தாகி ‘மையறு சிறப்பிற் றெய்வம்' என்னுஞ் சொற்றொடரைப் பிரித்தெடுத்துப்போய், முருகனுக்கும் ஏனைத் தெய்வங்களுக்கும் எடுத்த விழா அறாத ஆவணம் என்று கூட்டி நச்சினார்க்கினியர் இடர்ப்படுகின்றார். 159 - ஆவது வரிமுதல் கொடிச் சிறப்புக் கூறப்புகுந்த ஆசிரியர் மற்றைக் கொடிகளைக் கூறுதற்குமுன் தெய்வத்தன்மையுடை கோழிக்கொடியை முதலிற் கூறக் கருதி முருகப்பிரான்றன் திருக்கோயில் வாயிலிலே கட்டப்பட்டிருக்குமதனைக் கூறிய நுணுக்கமறியாது நச்சினார்க்கினியர் தாம் ஒருபொருள் கூறுவான் புகுந்து இழுக்கினார்.

UI

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/238&oldid=1579487" இலிருந்து மீள்விக்கப்பட்டது