உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

மறைமலையம் - 9

கூழ் உணவுப்பொருள். மஞ்சிகை - பேழை. பண்ணியம் - பலபண்டம்.பாகு உகுத்த பசு மெழுக்கிற்காழ் பாகாகக்காய்ச்சி வார்த்த பசிய மெழுக்கைப் பூசிய கோல். கிடுகு - சட்டம்; இச்சொல் முன் ஒருகால் கேடகம் என்னும் பொருளில் வந்தவாறு காண்க. 'பாகு உகுத்த' என்பதற்கு இப்பொருள் காணமாட்டாத நச்சினார்க்கினியர் இதனை ‘மஞ்சிகை' என்பதனொடு சேர்த்துப் 'பாக்கு வெற்றிலை சொரிந்த மஞ்சிகை' என்று பொருள் கூறினார். அவ்வாறியைத்தற்குச் செய்யுளிடந்தராமையின் யாங் கூறியதே பொருளென வறிக; சிறார் ஏறாமைப்பொருட்டுக் கோல்களில் மெழுக்குத் தடவி நாட்டுதல் உண்டு. இனி ‘மெழுக்கு' என்பதற்குச் ‘சாணத்தால் மெழுகுதல்' என்றுரை கூறினாருமுளர்; அது பொருந்தாமை ஈண்டுக் கூறியவாற்றாற் காண்க. ‘கரும்பின் ஒண்பூப்போல மேலூன்றிய துகிற்கொடியும்’ என, அகன்று நின்ற உவமையை அணுகிய நிலையில் இயைக்க.

தொன்று தொட்டுப் பிறரை ஏவிக்கொள்ளும் உரிமை கல்வியறிவின் மேம்பட்டார் பாலதாய் நிற்றலின் ‘தொல்லாணை நல்லாசிரியர்’ என்றார். நிரம்பிய கல்வியில்லார் அவர்முன் வாய்திறக்கவும் அஞ்சுவராகலிற், கல்வியிற்சான்ற அவரெடுத்த காடி அவர்க்கு அச்சந்தருமெனப்பட்டது.

'துவன்று இருக்கைத் தூங்குநாவாய்' என மாற்றிக்கூட்டி 'நிறைந்த இருப்பினையுடைய அசையும் மரக்கலன்கள்' என்க. ‘மிசைக் கூம்பின்' என்னுஞ் சொற்றொடரைக் கூம்பின்மிசை என மாறுக. சேய நாடுகளிற் சென்று பண்டங்கள் இறக்கியும் ஏற்றியும் மீண்ட தத்தம் மரக்கலங்களைக் கண்டு அவ்வவற்றிற்குரியார் மகிழ்தற்கு அவற்றின்மேற் கட்டிய கொடிகள் அடையாளமாய் நின்றுதவுதலின் அவை விரும்பத்தக்கன என்றார்; நசை விருப்பம்.

நறவுநொடை

பெருங்கொடி

-

கள்விற்றல். பதாகை (வடசொல்)

(183 - 193) செல்லாநல்லிசை....மறுகி (183-193)

காலின் வந்த கருங்கறிமூடை- வண்டியிற் கொண்டு வந்த கரிய மிளகுபொதி. கால் - உருள்; அஃது இங்கே உருளையுடைய வண்டியை உணர்த்திற்று; இச் சொல் இப் பொருட்டாதல்

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/239&oldid=1579488" இலிருந்து மீள்விக்கப்பட்டது