உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

207

“கால்பார் கோத்து" என்னும் புறப்பாட்டிற் காண்க. “ஒருங்கு தொக்கன்ன வுடைப்பெரும் பண்டங்கலத்தினுங் காலினுந் தருவன ரீட்ட”2 என் புழி அடியார்க்கு நல்லார் உரை கூறியவாறே வழியிற் கொண்டு வந்த' என்றுரைப்பினுமாம். இப்பொருள் கூறவறியாத நச்சினார்க்கினியர் ‘நீரிற் காலில்வந்த' என இரண்டிடத்துக் கூட்டிக் ‘கடலிலே காற்றான்வந்த’ வெனப் பொருந்தாவுரை வரைந்தார். குடமலை - குடகுமலை; அல்லது மேற்கணவாய்மலை; காவிரிப்பூம்பட்டினத்திற்கு மேற்கிலுள்ள ததுவாகலின், ஈண்டதனைக் கூறுதலே பொருத்தமாம்; பொதியம் தெற்கேயுள்ளதாகலின் நச்சினார்க்கினியர் அதனைக் கூறுதல் பொருந்தாது. ஈழம் - இலங்கை.

(193-212) நீர்நாப்பண்ணு - துவன்றிருக்கை

ப்

துறைமுகத்து நீரில் உலாவும் மீனும் கரையிற் றிரியும் யாடு முதலான விலங்குகளும் நீரிலும் நிலத்திலும் இடரின்றி உறங்கிச் செம்படவர் குடிசை முற்றத்திலும் ஊன்விற்றற்றொழிலை யுடையார் குடிசையிலும் தாவிப் பாய்ந்துத் திரண்டும் நிற்கும் என்க. இங்ஙனம் நெறிப்படப் பொருளுரையாது நச்சினார்க் கினியர் ‘புரவி மூடை மணிபொன் முதலியன நீரினும் நிலத்தினும் இனிது தங்கி வளம் மயங்கிய மறுகு என்றிடர்ப்பட் டியைக்கின்றார், ‘துஞ்சி' என்னுஞ் சொல்லுக்கு 'உறங்கி' என்னுஞ் செம்பொருளும் அதற்கேற்ற மீன், மா முதலிய உயிருடைப் பொருள்களும் உளவாகவும், அவற்றைவிடுத்து அச்சொல்லுக்குத் தங்கி என ஆக்கப் பொருள்கொண்டு அவ்வாறு இயைத்தது தீம்பாலுண விருப்ப அதனை உவர்த்தொதுக்கி அறிவுமயக்குங் கள்ளுண்பார் திறனோடொப்ப தாயிற்றென்க.

மேலும், 217 - வது வரியிற் பலவேறு மொழி வழங்கும் பலதேய மாக்களுங் காவிரிப்பூம்பட்டினத்தில் வந்துறைவரெனக் கூறிய பகுதியை ஆண்டு நின்றும் பிரித்தெடுத்து வந்து அவர் உறையும் மறுகு என ஈண்டிதனொடு வரன்முறையின்றி முடிக்கின்றார் நச்சினார்க்கினியர்.

கிளைகலித்து- கொல்வாரின்மையின் தம் சுற்றம் பல்கி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/240&oldid=1579489" இலிருந்து மீள்விக்கப்பட்டது