உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

பண்ணியம்

-

மறைமலையம் - 9

தின்பண்டம். பசும்பதம்

-

புதிது வந்த

அரிசியால் ஆக்கிய சோறு. நுகம் - குறுக்குக் கட்டை. பகல் - அதன் நடுவில் தைத்த ஆணி, கொண்டி - மிகுந்த பொருள்.

(213-218) பல்லாயமொடு

பெறினும்

பல

‘புலம்பெயர் மாக்கள் பல்லாயமொடு பதிபழகிக் கலந்தினி துறையும்' என் கூட்டுக. பல் ஆயமொடு பதி பழகி தொகுதியாகக் காவிரிப்பூம்பட்டினத்திலுறையும் நன் மக்களோடும் ஒருமித்துப் பழகி. வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல் வேறு வேறாகச் சிறந்த அறிவுவாய்த்த சுற்றத் தாரையுடைய நன்மக்கள். வேறு வேறாக அறிவு சிறத்தலாவது பலதிறப்பட்ட நூல்களிற் பயின்று முதிர்ந்த அறிவு வாய்த்தல். பலதிறப்பட்ட அறிவுடைய நன்மக்களெல்லாரும் திருவிழா ய நடைபெறும் ஒரிடத்திற்சென்று கூடுதல்போலப் பலதிறப் பட்ட மொழிகள் வழங்கும் பல தேயத்தாரும் இந் நகரத்திற் குழுமுவர் என்க. 'வேறுவேறுயர்ந்த' என்னும் அடைமொழித் தாடரை நச்சினார்க்கினியர் புலம்பெயர் மாக்களொடு கூட்டுகின்றார்; அங்ஙனமுரையுரைத்தல் வேண்டாகூறலேயா மென்க.

(220-239) வாரிருங்கூந்தல்......... தண்பணையெடுப்பி

-

-

-

பிணிஅகம் சிறைக்களம். பீடுகாழ் முற்றி தன் பெருமைத்தன்மை வைரம் ஏறி முதிர்தலால். காப்புஏறி மதிலைஏறி. வாள்கழித்து - மதிற்புறத்திருந்த வாட்படைவீரரை ஓட்டி; அல்லது தனது வாளை உறையினின்றுங் கழித்து எனுலுமாம். ஓங்கு எழில் யானை - உயர்ந்த அழகினையுடைய யானை. தூறு இவர் துறுகல் - குறுஞ்செடி படர்ந்த நெருங்கிய பொறைக்கல். அல்லது சிறுகுன்று; “வேங்கை மாத்தகட் டொள்வீ தாய துறுகல்” என்றார் புறத்திலும், 'உமிஞை' சிறுபூளை எனப்படுமென்று திவாகரத்துட் சொல்லப்படுதலின், அதனோ டினமான பெரும்பூளையுஞ் சூடினானென்று ஆசிரியர் கூறிய கருத்தறியாது, நச்சினார்க்கினியர் இச் சொல்லை 241 ஆம் அடியிலுள்ள ‘மயங்கி’ என்பதனொடு கூட்டியுரை கூறுகின்றார். மாக்கண் அகல் அறை பெரிய இடத்தான் அகன்ற பாசறை.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/241&oldid=1579490" இலிருந்து மீள்விக்கப்பட்டது