உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

209

பணை - மருதநிலம், அங்குள்ள குடிகளுக்கு ஆயிற்று. 'பொய்கை செருந்தி நீரற்று' நீடி எனக் கூட்டுக.

(240-245) வெண்பூக்..........யுகளவும்

அறுகோட்டு இரலை

அறுப்பறுப்பான கொம்புள்ள

கலைமான், மான்பிணை - பெட்டை மான்.

(246-251) கொண்டிமகளி........... துறையவும்

கொண்டி மகளிர் - சிறையாகப் பிடித்துக் கொள்ளப் பட்ட மகளிர். ‘கொண்டி’ முன்னே ‘மிகுபொருள்' என்னும் பொருளில் வந்தது காண்க. கந்து - தெய்வம் உறையுந்தறி ; சிவலிங்கம், பொதியில், அம்பலம் என்பன கோயிலென்று பொருளுணர்த்தும்.

(252-260) மருவிலை நறும்பூத்... டுவன்றவும்

66

‘அறுகை’ என்பதில் ஐ : சாரியை ; அறுகம்புல், “அறுகையு நெருஞ்சியு மடர்ந்து" என்றார் மணிமேகலையினும். அழல்வாய் ஒரி அஞ்சுவரக் கதிர்ப்பவும் - அழன்ற வாயினையுடைய முதுநரிகள் பிறர்க்கு அஞ்சுதல் உண்டாக ஒங்கி ஊளையிடவும் என்க. கூகையில் ஓர் இனம் ஆந்தை எனவும் பிறிதோர் இனம் கோட்டான் எனவும் வழங்கப்படும் என்பர்; இங்கே கூகை என்பது ஆந்தை. இது கூவும் ஒசை அழுகுரலை யொத்தலின் அழுகுரற் கூகை கோட்டான் என்றார். ஆண்டலை போல்வதொரு பறவை; இதன் றலை ஆண்மக்கள் தலைபோ லிருத்தலின் இப்பெயர் பெறுவதாயிற் றென்க. “புலவூண் பொருந்திய குராலின் குரலும், ஊண்டலை துற்றிய ஆண்டலைக் குரலும்” என்றார் மணிமேகலையினும்.

66

-

(261 - 268) கொடுங்கான்........குழறவு

(261-268)

கொடுங்கால் மாடம் - கால்கள் வளைத்து அழகாகக் கட்டப்பட்ட மாடம். ‘கொடுங்கால' என்னும் இவ்வடை மொழியை நச்சினார்க்கினியர் பேய் மகள் என்பதனொடு வறிதே யைக்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/242&oldid=1579491" இலிருந்து மீள்விக்கப்பட்டது