உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

மறைமலையம் - 9

'விருந்து ஆனாது உண்டு என மாற்றுக; 'உண்டும்' என்பதில் உம்மை தொகுத்தல்.

வறுங்கூடு - வறிதாய்ப்போன நெற்கூடு.

சாவிற்கு முற்குறியாகக் கூகை நடுப்பகலிற் குழறு தலைப் நன்பகலுங் கூகைநகும் என்னும்

'பேணாரகநாட்டு,

புறப்பொருள்

(வஞ்சிப்படலம்.4)

வண்பாமாலையானும்

உணர்க,

(269-299) மருங்கடி...றோளே

ரயில்

அம்பெய்வதற்கு மதின்மேற் சமைத்த ஒரு மதிலுறுப்பு; இதனை அடியார்க்கு நல்லார் 'குருவித்தலை’ என்பர்.3

விசிபிணிமுழவு - இறுகக்கட்டின வார்க்கட்டையுடைய முரசு, பரு ஏர் எறுழ் கால் - பெரிய அழகினையும் வலியினையும் உடை ய கால்.

இனி, இங்ஙனம் வகுத்துக் கொண்டு உரை கூறிய பொருத்துவாய்களையெல்லாம் ஒரு முடிபாக்கி இப்பாட்டின் வினைமுடிவு காட்டுகின்றாம். இதன்கட்போந்த இருபத்தேழு பொருத்துவாய்களையும் பொருட்பாகுபாட்டிற் காண்க. இங்கு முடிபுமட்டுமே வரைகின்றாம்.

நண்ணார் காப்பு ஏறி வாள்கழித்துத் தாயம் எய்தி அங்ஙனம் எய்தியமையானும் மனமகிழானாய்ப் போர்வேட்டுச் சமம்முருக்கித் தண்பணைகளை அழித்துச் செறுவும் வாவியும் மயங்கவும் பொதியிலில் யானை உறையவும் மன்றத்து ஓரி கதிர்ப்பவும் ஆண்டலை விளிப்பவும் பேய் மகள் துவன்றவும் செழுநகர் வறுங்கூட்டுள்ளிருந்த கூகை குழறவும் ஊர்கவின் அழியப் பெரும்பாழ்செய்தும் அமைதி பெறானாய்த் தான் முன்னிய துறை போகலிற் பல்லொளியர் ஒடுங்க அருவாளர் தொழில்கேட்ப வடவர் வாடக் குடவர் கூம்பத் தென்னவன் திறல்கெடச் சீறிக் கண்ணாற்செயிர்த்து நோக்கிப் பொதுவர் வழிபோன்ற இருங்கோவேள் மருங்கு சாயக் காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கி உறந்தை போக்கிக் குடிநிறீஇ ப் புகழை அமைத்துப் புதைநிறீஇப்பெயர்கொடுத்துப்புறக்கொடாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/243&oldid=1579492" இலிருந்து மீள்விக்கப்பட்டது