உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

211

வேந்தர் சூடிய கழற்காலினையும் புதல்வுரும் மகளிரும் திளைக்கும் மார்பினையும் பெருவலிமையினையும் உடைய திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய வேலினும் யாம் போதற்கு எழுந்த கானங் கொடியதா யிராநின்றது;அவன் செங்கோலினும் என்காதலியின் மென்றோள்கள் குளிர்ந்தனவா யிருக்கின்றன. ஆகலின், காவிரி பொன்கொழிக்கும் கழினியினையும், பாக்கத்தினையும் பூந்தண்டலையினையும், ஏ ஏரியினையும், அரண்மணை அட்டிலினையும், சாலையினையும், காளிகோட்டத்தினையும், மன்றம் புறச்சேரி முதலியவற்றையுடையனவாய்த் துறக்கம் ஏய்க்கும் பெருந்துறையினையும், உலகு செய்வார் மடியாதிருக்கும் பண்டசாலை முன்றிலினையும், விழவறாத ஆவணத்தினையும், செழுநகர் வரைப்பினையும், நனந்தலை மறுகினையும், வேளாளர் துவன்று இருக்கையினையும் உடையதாய்ப் பலமொழி வழங்கும் பலதேயத்தாரும் போந்து உறையப் பெற்றதாய் உள்ள காவிரிப்பூம்பட்டினத்தையே அவ் வேந்தர்பெருமான் பரிசிலாகத் தரப்பெறுவேனாயினும் கூந்தல் இழை முதலியவற்றையுடைய என் ஆருயிர்க் காதலியைப் பிரிந்து வருதற்கு ஒருப்படமாட்டேன் கண்டாய் நெஞ்சமே! என வினைமுடிவு செய்க.

அடிக்குறிப்புகள்

1. The most striking characteristic of the poetry of Milton is the extreme remoteness of the association by means of which it acts on the reader - Macaulay's Milton

2.

சிலப்பதிகாரம், மனையறம் படுத்த காதை

3. சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை 217 -ஆம் வரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/244&oldid=1579493" இலிருந்து மீள்விக்கப்பட்டது