உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

அருஞ்சொற்பொருள் அகரவரிசை

அகவ இசைக்க

அகழ்க்குவன் – கல்லுவன்

அங்கி (வடசொல்) – தீ.

அசை கட்டிய

அசைஇ இருந்து

அசைவு

இளைப்பு.

அஞ்சுவர – அச்சம் உண்டாக

அட்டி - கொடுத்து, விட்டு

(பரிபாடல்); இட்டு (திருமுரு காற்றுப்படை); மிகவிட்டு (பெரும் பாணாற்றுப்படை)

அட்டில் - அடுக்களை

அடம்பு – அடப்பங்கொடி,

பாலிகை (பிங்கலந்தை)

அணங்கு - தெய்வம், வருத்துந் தன்மை, வருத்தம்.

அணை – தறி

அதிர - முழங்க.

அந்தி – மாலைப்பொழுது. அமரர் (வடசொல்) - தேவர் அயர் - செய்யும், கொண்டாடும் அரண்

காவலிடம், காவலிட மாய்க் கொண்டு நின்ற வீரனை உணர்த்தியது ஆகுபெயர்.

அரிமா - சிங்கம்

அருங்கடி – அரியகாவல்.

அருங்கடிவரைப்பு - அரிய காவல் அமைந்த மதில்.

அருத்தி – நுகர்வித்து.

அருவாளர் அருவாள் நாட்டின்

அரசர்

அலவன் – நண்டு

அவிர் -விளங்கு

அறம் - நல்வினை, பிங்கலந்தை

அறுகை – அறுகம்புல்; ஈற்றில் நின்ற ஐ சாரியை.

அறு கோட்டு இரலை அறுப் பறுப்பான கொம்புள்ள கலை மான்.

அறை பாசறை

ஆக்கம் - நுகர்ச்சிப் பொருள்கள். ஆங்கண் - அவ்விடம், அங்கண் என்பது நீண்டது.

ஆண்டலை கூகை கோட்டான் இனத்தைச் சேர்ந்த ஒரு பறவை; இதன்றலை ஆண் மக்கள் தலை போறலின் இப் பெயர் பெற்றது; இதனைக் கோழிஎன்பர் பிங்கலந்தையுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/245&oldid=1579497" இலிருந்து மீள்விக்கப்பட்டது