உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை

ஆராய்ச்சியுரை

219

துஞ்சி - உறங்கி.

துஞ்சும் - தங்கும், “அறந்துஞ்சுஞ்

செங்கோலையே”

புறநானூறு.

துடி உடுக்கை, பாலைப்பாறை.

துடுப்பு கணு.

துணை கணவன்.

துப்பு – வலிமை.

துய்த்தும் - நுகர்ந்தும்.

துயில் - உறக்கம்.

துவன்று – நிறைந்த, நெருங்கிய,

“துவன்று நிறைவாகும் தொல்காப்பியம், உரிச்

சொல்லியல்.

துறக்கம் - வானுலகு.

துறுகல் - பொறைக்கல், சிறுகுன்று, "புலவுசேர் துறுகல்" என்றார் ஐங்குறு நூற்றில்.

துறைபோகிய - முற்றக் கற்ற.

துறைபோகலின் - முற்ற முடித்தலின்.

தூ தூய.

தூஉய் - தூவி, “மலைவான்

-

கொள்கென உயர் பலி

தூஉய் புறநானூறு.

தூங்கு - அசையும்.

தூசு கூறை.

தூதுணம்புறவு - தூதுஉண்

அம்புறவு எனப்பிரித்துச் 'சிறுகல்லைத் தின்னும் அழகிய புறா' எனப் பொருளுரைக்க; "தூதுணம்புறவெனத் துதைந்தநின் னெழினலம்” என்றார் கலியினும்.

66

தூறு - சிறுசெடி.

தெவ்வர் - பகைவர், "தெவ்வுப் பகையாகும்" தொல். உரி.

தெறுவு - சுடுதல், “தெறுகதிர்க் கனலி” என்பது புறநானூறு.

தென்னவன் பாண்டியன்.

தேஎம் - நாடு, தேயம்.

தேம்ப - வாட.

தேறுநீர் - தெளிந்தநீர். தொக்காங்கு - கூடினாற்போல.

தொட்டு – அகழ்ந்து தோண்டி. தொடி கடகம்.

தொடுதோல் செருப்பு. தொடை – படி, கட்டு, ஆகு பெயரால் யாழை உணர்த் திற்று.

தொல்சீர் - பழைய சிறப்பு.

தொல்லிசை - தொல் இசை, அடிப்பட்டபுகழ்.

தொலைத்த அழித்த.

நகர் - வீடு, 'மாளிகை' என்பர் புறப் பொருள் வெண்பா மாலை உரைகாரர், பொதுவியற் படலம், கோட்டம்; கோயில்,

66

'முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே" என்றார்

புறநானூற்றினும்.

நசை விருப்பம்.

நடுகல் - இறந்துபட்ட மறவனை

நினைவு கூர்தற்கு நட்ட கல், இங்ஙனங் கன்னடுதலைப் “பரலுடை மருங்கின்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/252&oldid=1579509" இலிருந்து மீள்விக்கப்பட்டது